உங்கள் ஜோ? | காலா ஏப்ரல் 14 வராதது ஏன்? | சினிமாவில் தினமும் கற்று கொண்டு இருக்கிறேன் : தன்ஷிகா | கமலின் இந்தியன் 2-வில் அஜய் தேவ்கன் | பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? | இயக்குநர் மிஷ்கினின் பேச்சை இடைமறித்த சாந்தனு! | நடிகர் ரகுமானை ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹானா | ஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன் | ராஜமவுலி படத்தில் ராக்ஷி கண்ணா? | ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிய ஹிந்தி படம் |
துருவங்கள் 16 படத்திற்கு பிறகு மீண்டும் பிசியாகியிருப்பவர் நடிகர் ரகுமான். இவர் தனது படங்களின் ஆடியோ விழாக்கள் தவிர மற்ற படவிழாக்களில் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற "ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல" என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது ரகுமான் பேசுகையில், இந்த படத்திற்கு ஹீரோ முடிவு செய்வதற்கு முன்பு, புதுமுக இயக்குனரிடம் இந்த கதையை கேளுங்கள் என்று அவரை என்னிடம் அனுப்பி வைத்தார் ஏ.ஆர்.ரெஹானா. நானும் அந்த படத்தில் என்னை நடிக்க வைக்கத்தான் கதை கேட்க சொல்கிறார்கள் என்று நினைத்து கதை கேட்டேன். கதை நன்றாக இருந்ததால் அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். அதையடுத்து என்னிடம் கால்சீட் கேட்பார்கள் என்று பார்த்தால், புதுமுக நடிகர் ஒருவர் நடிப்பதாக சொன்னார்.
அதன்பிறகுதான் வேறு நடிகர் நடிக்கும் படத்திற்கான கதையைத்தான் நம்மை கேட்க வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அந்த வகையில், இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரெஹானா, எனக்கு வாய்ப்புத் தருவது மாதிரியே பேசி என்னை ஏமாற்றி விட்டார் என்று ஜாலியாக பேசினார்.
நான் துருவங்கள் 16 படத்தில் நடித்து முடித்தபோது, அது பலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் படம் வெளியானபோது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்தது. அதேபோல்தான் இந்த ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல படமும் ரசிகர்களால் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறேன் என்றார் ரகுமான்.