உங்கள் ஜோ? | காலா ஏப்ரல் 14 வராதது ஏன்? | சினிமாவில் தினமும் கற்று கொண்டு இருக்கிறேன் : தன்ஷிகா | கமலின் இந்தியன் 2-வில் அஜய் தேவ்கன் | பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? | இயக்குநர் மிஷ்கினின் பேச்சை இடைமறித்த சாந்தனு! | நடிகர் ரகுமானை ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹானா | ஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன் | ராஜமவுலி படத்தில் ராக்ஷி கண்ணா? | ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிய ஹிந்தி படம் |
சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் வித்யாபாலன் நடித்த இந்திப் படமான தும்ஹாரி சுலு தமிழில் ரீமேக்காகிறது. வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகிறார். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். 'தும்ஹாரி சுலு' பட தமிழ் ரீமேக்கை ராதாமோகன் இயக்குகிறார்.
'நாச்சியார்' படத்தைத் தொடர்ந்து 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்துவரும் ஜோதிகா, அந்தப் படத்தை முடித்ததும் ஏப்ரல் இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இந்தப் படத்துக்கு உங்கள் ஜோ என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளது.
மேலும் நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதால் அவரின் சம்பளமும் அடுத்தடுத்த படங்களில் உயர்ந்து வருகிறது.