உங்கள் ஜோ? | காலா ஏப்ரல் 14 வராதது ஏன்? | சினிமாவில் தினமும் கற்று கொண்டு இருக்கிறேன் : தன்ஷிகா | கமலின் இந்தியன் 2-வில் அஜய் தேவ்கன் | பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? | இயக்குநர் மிஷ்கினின் பேச்சை இடைமறித்த சாந்தனு! | நடிகர் ரகுமானை ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹானா | ஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன் | ராஜமவுலி படத்தில் ராக்ஷி கண்ணா? | ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிய ஹிந்தி படம் |
நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்கி, மக்கள் நீதி மய்யம் என தன் கட்சிக்கான பெயரையும் அறிவித்துவிட்டார். முழுநேர அரசியலில் ஈடுபடும் முன் தன் கைவசம் உள்ள படங்களையும் முடிக்க எண்ணியுள்ளார். அந்தவகையில் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன.
சபாஷ் நாயுடு பாதி படமாகி உள்ளது. இதுதவிர ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். தற்போது அதற்கான வேலைகளில் ஷங்கர் இறங்கியுள்ளார். சமீபத்தில் தைவானில் இந்தியன் 2 படத்திற்கான சிறிய ரக பலூனை பறக்கவிட்டு அதன் பணிகள் துவங்கியதை அறிவித்தார் ஷங்கர்.
இந்தியன் 2 படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியின் 2.O படத்தில் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள நிலையில், இந்தியன் 2 படம் மூலம் அஜய் தேவ்கனும் தமிழுக்கு வருவார் என தெரிகிறது.