மதுரை: இனி நட்சத்திரமாக இல்லாமல் உங்கள் வீட்டு விளக்காக இருப்பேன்.ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். என புதிய கட்சியை துவக்கி வைத்து நடிகர் கமல் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை, நடிகர் கமல் இன்று துவக்கினார். . மதுரையில், இன்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் , கட்சி கொடி ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். இதில் டில்லி முதல்வர்
கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
வண்டாளம் வெளியே வரும்
இந்நிலையில், மதுரை ஒத்தகடையில் இன்று மாலை நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் ‛‛மக்கள் நீதி மய்யம்'' என
அறிவித்து கட்சியின் கொடியையைம் கமல் அறிமுகப்படுத்தினார். முன்னதாககாலை, 7:45 மணிக்கு, அரசியல் பயணத்தை, ராமேஸ்வரத் தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வீட்டில் இருந்து, கமல் துவக்கினார்.
கட்சி பெயர், கட்சி கொடியை அறிமுகப்படுத்தி நடிகர் கமல் பேசியது, சினிமா நட்சத்திரமாக இல்லாமல் ,உங்கள் வீட்டு விளக்காக இருப்பேன். 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணியை செய்து கொண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதிான் இது. கடந்தவை கடந்தவைகளாக இருக்கும்; ஆனால் மறந்தவையாக
இருக்காது.
இங்கு எங்கள்தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் வெளியே வரும் நாள். இந்த அநீதிகளை பார்த்துக்கொண்டு நாம் எத்தனை காலம் அமைதி காப்போம். மக்கள் நலனே எனக்கு பிரதானம். இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை. இங்கு நல்ல மனத்திற்கு தான் பஞ்சம். நாம் துவங்கியிருக்கும் நியாயப்போரின் தமிழர்படை தான் இது.
நல்ல முதல்வர்களுக்கு இருக்கும் கொள்கை தான் எனக்கு உண்டு.நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்.எனக்குப் பிறகும், நாலைந்து தலைமுறைக்கு இந்த கட்சி இருக்க வேண்டும்.பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி தண்ணீர் நமக்கு கிடைக்கும். சிலர் தான் பிரச்னையை துாண்டி விடுகின்றனர்.பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போட்டால், அவர்களை நீங்கள் கேள்வி கேட்க முடியாது. இவ்வாறு
பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply