விடிவி 2ம் பாகத்தில் சிம்பு இல்லை, மாதவன்? | எமி ஜாக்சன் இந்த ஆண்டு காதல் திருமணம் ? | நாச்சியார், தானாகவே தோல்வியைத் தேடிய பாலா | மேக்கப் தாமதம், கேட்பாரா கீர்த்தி சுரேஷ் ? | டொவினோ தாமஸை விடாத கௌதம் மேனன் | 'காலா'வுக்காக ஒரு வாரம் தள்ளிப்போகும் மோகன்லால் படம் | மோகன்லால் - மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் விருது நடிகர்..! | இனி நான் சினிமா நட்சத்திரம் இல்லை : கமல் | ஆர்யாவை திருமணம் செய்ய விரும்பிய 6 ஆயிரம் பெண்கள் | கன்னிராசியை வாங்கிய சிங்காரவேலன் |
இன்று முதல் தமிழ்நாட்டில் மேலும் ஒரு அரசியல் கட்சி, அரசியல் தலைவர் உருவாகி உள்ளார்.
1960ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். சுமார் 58 ஆண்டுகளாக கலையுலகப் பயணத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இத்தனை வருடங்களாக திரைத்துறையில் தனக்கென தனி பாதையை உருவாக்கி வைத்திருப்பவர் இவர் மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையில்லை. எப்படிப்பட்ட படங்களில் வேண்டுமானாலும் நடிக்காமல், தனித்துவமான படங்களில் நடித்ததால் உலக அளவில் பாராட்டப்படும் இந்திய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்தவர். போட்டி நிறைந்த ஹிந்தித் திரையுலகில் அவரும் சில காலம் முன்னணியில் தான் இருந்தார். தயாரிப்பாளராக, இயக்குனராக, கதை, வசனகர்த்தாவாக பல முகங்களை திரையுலகில் காட்டியவர்.
இத்தனை வருடங்களாக கமல்ஹாசன் என்று சொன்னால் திரைக்கலைஞர் என்ற அடைமொழியும் கூடவே வரும். இன்று முதல் அது அரசியல்வாதி என்றும் மாறி உள்ளது. கடந்த ஒரு வருட காலமாகவே அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி வந்த கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கடந்த ஆண்டு சொன்னார். அதன்படி, அதற்கான பாதையை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கி உள்ளார்.
இன்று நடைபெறும் விழாவில் அவருடைய கட்சியின் பெயர், கொள்கை என பல அறிவிப்புகளை வெளியிட உள்ளார். எத்தனையோ நடிகர்கள் தமிழ்நாட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளனர். ஆனால், கமல்ஹாசன் அரசியல் கள நுழைவு இந்திய அளவில் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருடைய நெருங்கிய நண்பர் ரஜினிகாந்துக்கு முன்னதாகவே அரசியல் களத்தில் இறங்கும் கமல்ஹாசன், தமிழக மக்களின் கருத்துக்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு முன்னணி அரசியல் தலைவராக அவதாரம் எடுப்பாரா என்பதை காலம் தான் முடிவெடுக்கும்.