பனாஜி:'மனோகர் பரீக்கர், கோவா முதல்வராக இருக்கும் வரை, அரசுக்கு அளிக்கும் ஆதரவை, 'வாபஸ்' பெற மாட்டோம்' என, ஆட்சியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தெரிவித்து உள்ளன.
கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.40உறுப்பினர்கள் அடங்கிய சட்ட சபையில், பா.ஜ.,வுக்கு, 14 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எம்.ஜி.பி., எனப்படும், மஹாராஷ்டிரா கோமந்த் கட்சி, ஜி.எப்.பி., எனப்படும், கோவா பார்வார்டு கட்சி ஆகியவற்றின் தலா, மூன்று,
எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூன்று சுயேச்சைகள் ஆதரவுடன், கோவாவில், பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.
'மனோகர் பரீக்கர் தான், முதல்வராகபதவியேற்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன், இந்த கட்சிகள், ஆட்சியமைக்க, பா.ஜ.,வுக்கு ஆதரவு தந்துள்ளன. தற்போது, கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள மனோகர் பரீக்கர், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.அவரது உடல் நிலை பற்றி, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. ஆனால் இதை, பா.ஜ.,வும், லீலாவதி மருத்துவமனை நிர்வாகமும் மறுத்துள்ளன.
இந்நிலையில், எம்.ஜி.பி., தலைவர், தவலிகர் கூறுகையில், ''மனோகர் பரீக்கர்
விரைவில் குணம் அடைய, ஆண்டவனை வேண்டுகிறோம். ''அவர் விரைவில் குணமடைந்து,
பணிக்கு திரும்புவார் என, நம்பிக்கை உள்ளது. ''பரீக்கர் முதல்வராக
இருக்கும் வரை,ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை, வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.
இதே போல், ஜி.எப்.பி., தலைவர், சர்தேசாய் கூறுகையில், பரீக்கர் வெற்றி பெறுவார். இந்த மருத்துவ சிகிச்சையையும், அவர் வெற்றிகர மாக எதிர்கொண்டு, பணிக்கு திரும்புவார். பரீக்கர் முதல்வராக இருக்கும் வரை, அரசுக்கு எங்களின் ஆதரவு தொடரும்,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து