கட்சி சின்னம் என்ன சொல்கிறது : கமல் விளக்கம் | கமல் கட்சியில் சினிமா பிரபலங்கள் | டுவிட்டரில் நம்பர் 1 - மக்கள் நீதி மய்யம் | வரி பாக்கி : ராம்கி வீட்டிற்கு நோட்டீஸ் | இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | மக்கள் நீதி மய்யம் - கமல் கட்சியின் பெயர் | ரூ.100 கோடியை தொடுமா பேட் மேன்? | சாகித் கபூரின் புதிய படம் துவங்கியது | அய்த்ராஸ் 2 : சுபாஷ் திட்டம் | நாளை முதல் நமஸ்தே இங்கிலாந்து ஆரம்பம் |
தமிழ் சினிமாவில் 'மதராசபட்டிணம்' படம் மூலம் பிரிட்டிஷ் மாடல் ஆன எமி ஜாக்சன் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்திற்கப்பிறகு 'ஐ' படம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது ரஜினிகாந்த் ஜோடியாக '2.0' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தி வில்லன்' என்ற கன்னடப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அவரது கைவசம் வேறு படங்கள் எதுவுமில்லை. டிவி தொடர் ஒன்றிலும் தற்போது நடித்து வருகிறார்.
கடந்த சில வாரங்களாகவே எமி ஜாக்சன் அவருடைய நெருங்கிய நண்பரான ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் பல்வேறு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இருவரும் காதலிப்பதாகத்தான் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே இருவரது நெருக்கமான புகைப்படங்கள் செய்தியாக மீடியாக்களில் இடம் பெற்று வருகின்றன.
வேறு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காதததால் எமி ஜாக்சன் இந்த ஆண்டு அவருடைய காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மையா அல்லது வதந்தியா என்பதை எமி ஜாக்சன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.