அறம் இயக்குநர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் | கனடா பிரதமரை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான் | பழைய பட டைட்டிலை விரும்பும் ஹீரோ | விடிவி 2ம் பாகத்தில் சிம்பு இல்லை, மாதவன்? | எமி ஜாக்சன் இந்த ஆண்டு காதல் திருமணம் ? | நாச்சியார், தானாகவே தோல்வியைத் தேடிய பாலா | மேக்கப் தாமதம், கேட்பாரா கீர்த்தி சுரேஷ் ? | டொவினோ தாமஸை விடாத கௌதம் மேனன் | 'காலா'வுக்காக ஒரு வாரம் தள்ளிப்போகும் மோகன்லால் படம் | மோகன்லால் - மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் விருது நடிகர்..! |
ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை துவங்கிய கமல், மதுரைக்கு செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு என இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இங்கு பார்த்த பிறகு தான் தெரிகிறது, இங்கு இருக்கும் ஒவ்வொரு வீடும் என் வீடு என்று. இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக தான் பார்த்தீர்கள். இனி நான் நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. என்னை பொத்தி பாதுகாக்க வேண்டியதும், ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு.
இப்போது இந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்த வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் என நினைக்கிறேன். இதே போன்ற கூட்டத்தையும், வரவேற்பையும் மதுரை கூட்டத்திலும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கமல் பேசினார்.