நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில், புதிய அரசியல் கட்சியை, மதுரையில், நேற்று துவக்கினார். புதிய கட்சிக்கான புதிய நிர்வாகிகளை அறிவித்த துடன், 'திரை நட்சத்திரமாக இல்லாமல், இனி, வீடுகளின் விளக்காக இருக்கப் போகிறேன்' என, உறுதி அளித்தார்.
நடிகர் கமல், தன் அரசியல் பயணத்தை, நேற்று காலை, ராமேஸ்வரத்தில் இருந்து துவக்கினார். காலை, 7:30 மணிக்கு, ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றார். அங்கு, அவரது மூத்த சகோதரர், முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.அதன்பின், அப்துல் கலாம் நினைவிடம் சென்று, மரியாதை
செலுத்தினார்; மீனவர்களை சந்தித்து பேசினார்.
அங்கிருந்து, ராமநாதபுரம் சென்றவர், பொது மக்களிடம் பேசுகையில்,''இதுவரை, என்னைசினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள். இனிமேல், நான் சினிமா நட்சத்திரம்
அல்ல; உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை அணையாமல், நீங்கள் தான்
பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.பின், அங்கிருந்து தன் சொந்த
ஊரான, பரமக்குடிக்கு சென்றார். அங்கு,
அவர் பேச, மேடை
அமைக்கப்பட்டிருந்தது. எனினும், மதுரை விழாவிற்கு நேரமாகி விட்டதால், மேடை
ஏறவில்லை. காரில் இருந்தபடியே, திரண்டிருந்த மக்களிடம், 'உங்கள் அன்புக்கு
நன்றி' எனக் கூறி, மதுரை புறப்பட்டார்.
மதுரையில், நேற்றிரவு,
7:27 மணிக்கு, பொதுக்கூட்ட மேடை ஏறியதும், நடிகர் கமல், தன் கட்சியின்
பெயர், 'மக்கள் நீதி மய்யம்' என, அறிவித்தார். முன்னதாக, 7:25 மணிக்கு,
கட்சி கொடி ஏற்றி, அதற்கு முதல் வணக்கம் செலுத்தினார். கொடியில், ஆறு கைகள்
இணைந்துள்ள நிலையில், நடுவில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. வெள்ளை,
சிவப்பு, கறுப்புநிறங்களால், கொடி உருவாக்கப்பட்டு உள்ளது.அந்த ஆறு கரங்களும், ஆறு மாநிலங்களை குறிக்கிறது என்றும், நடுவில் உள்ள நட்சத்திரம், மக்களை குறிக்கிறது என்றும், கமல் விளக்கம் அளித்தார்.
பொதுக்கூட்டத்தில், கமல் பேசியதாவது:
மக்களுக்காக துவங்கப்பட்ட கட்சி இது. நான் தலைவன் அல்ல; ஒரு கருவி தான். 'மக்கள் நீதி மய்யம்' என, கட்சியின் பெயரை சொல்லி பழகுங்கள். இனி தான் நமக்கு கடமை உள்ளது.
இது, ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல; இது தான் வாழ்க்கை. இந்த சந்தோஷத்துடன், நமக்கு பெரும் பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும், நாம் விளங்க வேண்டும்.
நான் அறிவுரை கூறும் தலைவன் அல்ல; அறிவுரையை கேட்கும் தொண்டன்.தமிழ்
தாய்க்குலத்திற்கும், சகோதரர்களுக்கும், நான் சமைக்கவிருக்கும் சமையலுக்கான, ஒரு பருக்கையை காட்டியுள்ளேன்.
இந்த
சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால், ஊழல் செய்தவர்களின் கை சுடும். ஒரு
பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம். நல்லவர்களின் நட்பும், ஆசியும், நமக்கு
கிடைத்திருக்கிறது.
இவ்வாறுஅவர் பேசினார்.
டில்லி முதல்வர் வருகை
* மதுரை வந்த டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலை, விமான நிலையத்தில், கலெக்டர், வீரராகவ ராவ் வரவேற்றார். அரசு சுற்றுலா மாளிகையில் தங்கிய அவரை, கமல் சந்தித்து, விழா மேடைக்கு அழைத்துச் சென்றார்
* கமல் பேசுவதை பார்ப்பதற்காக, மேடை அருகே, மூன்று இடங்களில், மெகா சைஸ், எல்.இ.டி., ஸ்கிரீன் பொருத்தி, நிகழ்ச்சியை ஒளிபரப்பினர்
* மேடை பகுதியில் கண்காணிப்பு கேமரா, நடமாடும் கழிப்பறை அமைத்திருந்தனர்
* பொதுக்கூட்ட மேடையில் இருந்து சரிந்து விழுந்த, எல்.இ.டி., ஸ்கீரினை தொழில்நுட்ப
ஊழியர்கள் சரி செய்தனர்
* மேடை முன், பத்திரிகையாளர் இருக்கை களை, ரசிகர்கள் ஆக்கிரமித்திருந்தனர். உட்கார இடமின்றி தவித்த பத்திரிகையாளர்கள், ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிர்வாகிகள் சமரசம் செய்து, ரசிகர்களை வெளியேற்றினர்
* கமல் நிர்வாகிகள், உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பும் ரசிகர்களிடம் மனுக்களை பெற்றனர்
* கடந்த, 39 ஆண்டுகளாக செயல்பட்ட கமல் ரசிகர் மன்றம், அரசியல் கட்சியாக மாறி உள்ளது
*சினிமா கலை நிகழ்ச்சிகள் போன்று பிரமாண்ட மேடை அமைத்து, 'ஹைடெக் சவுண்டு
சிஸ்ட'த்துடன் கூடிய ஸ்பீக்கர்களில், கமல் பாடல்கள் ஒலித்தன
* ரசிகர்கள் நம்மவர், 'டி ஷர்ட்' அணிந்து இருந்தனர். மேடையில், சிலம்பாட்டம், கரகம், மரக்கால் ஆட்டம் நடந்தது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து