ரூ.100 கோடியை தொடுமா பேட் மேன்? | சாகித் கபூரின் புதிய படம் துவங்கியது | அய்த்ராஸ் 2 : சுபாஷ் திட்டம் | நாளை முதல் நமஸ்தே இங்கிலாந்து ஆரம்பம் | அறம் இயக்குநர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் | கனடா பிரதமரை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான் | பழைய பட டைட்டிலை விரும்பும் ஹீரோ | விடிவி 2ம் பாகத்தில் சிம்பு இல்லை, மாதவன்? | எமி ஜாக்சன் இந்த ஆண்டு காதல் திருமணம் ? | நாச்சியார், தானாகவே தோல்வியைத் தேடிய பாலா |
கோல்கட்டாவில் நடந்த சர்வதேச கலாச்சார திரைப்பட விழாவில் தன்ஷிகா நடித்த சினம் படத்திற்கு 8 விருதுகள் கிடைத்துள்ளது. ஒரு வாரம் நடந்த இந்த விழாவில் உலக நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இதில் சினம் படத்தில் நடித்த தன்ஷிகா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினம் படத்தில் நடித்த பத்திதா சிறந்த துணை நடிகையாக தேர்வானார், அதே படத்தில் பணியாற்றிய சரவணன் நடராஜன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், தீபக் போரஜ் சிறந்த எடிட்டராகவும், சம்பத் சிறந்த ஒலிப்பதிவாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த பெண்களுக்கான படம் உள்பட மொத்தம் 8 விருதுகளை வென்றது.
தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்கத்துக்கு பிழைக்கச் சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதை. பாலியல் தொழிலாளியாக தன்ஷிகா நடித்துள்ளார். இதனை ஆனந்த் மூர்த்தி இயக்கி உள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், நேசன் கிரியேஷன் சார்பில் நேசன் திருநேசன் தயாரித்துள்ளார்.