ஜெ., வீட்டு பணியாளர்கள், முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிப்பதால், விசாரணை கமிஷன், குழப்பம் அடைந்துள்ளது.
ஜெ., மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது.ஜெ., வீட்டில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள் பட்டியலை, ஜெ.,விடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம், விசாரணை கமிஷன் கேட்டது. அவர், 31 பெயர்கள் உடைய பட்டியலை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்தார்.
அவர் கொடுத்தபட்டியலில் இருந்த முகவரி மற்றும் அலைபேசி வழியே, பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, விசாரணை கமிஷன், தனியார் நிறுவன உதவியுடன், புதிய பட்டியலை தேர்வு செய்தது. அதில், 21 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில், ஐந்து பேர் பெயர், பூங்குன்றன் கொடுத்த பட்டியலில் விடுபட்டிருந்தது. அவர்களையும் விசாரணைக்கு அழைக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஜெ., வீட்டில் நீண்ட காலமாக, சமையலராக இருந்த ராஜம்மாள், விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர், முதலில், ஜெ., தாயார் சந்தியா காலத்தில் இருந்து, சமையலராக இருப்பதாக கூறியவர், பின், 30 ஆண்டுகளாக பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.'ஜெ., அண்ணன் மகள் தீபாவை சந்தித்ததே இல்லை; அவர், யாரென்றே தெரியாது. போயஸ் கார்டனில் அடியாட்கள் யாரும் கிடையாது' என, ராஜம்மாள் கூறியுள்ளார். அவர் கூறிய பதில்களில் பல, முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளன.
அதேபோல், ஜெ., முகாம் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த கார்த்திகேயனும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பெரும்பாலும், ஒரே மாதிரி பதில்களை அளித்துள்ளனர்.இது, விசாரணை கமிஷனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அடுத்து வருவோரிடம், வேறு கோணத்தில் விசாரணையை நடத்த, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (9)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply