லக்னோ:''உ.பி., முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே, பல்வேறு நிறுவனங்களுடன், 4.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு, 1,045 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளது,'' என, அம்மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் லக்னோவில், முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்று துவங்கியது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
இந்த மாநாட்டில், 500க்கும் அதிகமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். மாநாட்டின் முதல் நாளிலேயே, பல்வேறு நிறுவனங்களுடன்,4.28லட்சம் கோடி ரூபாய்க்கு, 1,045 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன; இது, உ.பி., மாநிலத்துக்கு கிடைத்த கவுரவம்.வளர்ச்சியை நோக்கி, உ.பி., செல்ல துவங்கிஉள்ளதையே, இது காட்டுகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், செயல்படுத்தப்படும்
மாநிலத்தில்
முதலீடு செய்ய வருபவர்களுக்கு, தேவையான அனைத்து வசதிகளும் செய்து
தரப்படும்.பின்தங்கிய மாநிலம் என்ற நிலையை மாற்றி, முன்னேறும் மாநிலமாக,
உபி.,யை மாற்றுவோம்.
பா.ஜ.,வின், 11மாத ஆட்சியில், வன்முறை கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அமைதி நீடிக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிலதிபர்களுக்கு, தேவையான உரிமம், அனுமதி உட்பட அனைத்தும், ஒரே இடத்தில் கிடைக்கவும், வசதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
ராணுவ தொழிற்பேட்டை
உ.பி., முதலீட்டாளர் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:பிப்., 1ல், தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 'நாட்டில் இரண்டு இடங்களில், ராணுவதளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டை அமைக்கப்படும்' என, தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில், ஒன்று, உ.பி.,யில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதியான, பண்டல்கண்டில் அமைக்கப்படும். இதன் மூலம்,2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உ.பி.,யில்
திறமைக்கோ,வளத்துக்கோ பஞ்சமில்லை. சரியான கொள்கை, திட்டம் இருந் தால்
போதும், உ.பி., மக்கள் சாதனை படைப்பர். உ.பி., மக்களிடம் இருந்த
அவநம்பிக்கையை
போக்கி, புதிய நம்பிக்கையை, ஆதித்யநாத் ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு மாவட்டத்துக்கு ஒரு பொருள் என்ற திட்டத்தின் மூலம், மாநிலத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். மாநிலத்தில், ஜீவர், குஷிநகர் பகுதிகளில், சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விபத்தில், எம்.எல்.ஏ., பலி
உ.பி.,யில், நுார்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., வாக இருந்தவர், லோகேந்திர சிங், 45. இவர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, காரில், ஆதாரவாளர்கள் மூன்று பேருடன், லக்னோவுக்கு நேற்று காலை வந்து கொண்டிருந்தார். சீதாப்பூர் மாவட்டம், கமலாப்பூர் அருகே வந்த போது, எதிரே வந்த லாரி மீது, கார் மோதியது. இதில், எம்.எல்.ஏ., லோகேந்திர சிங் உட்பட நான்கு பேர் இறந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (5)
Reply
Reply
Reply
Reply