கட்சி சின்னம் என்ன சொல்கிறது : கமல் விளக்கம் | கமல் கட்சியில் சினிமா பிரபலங்கள் | டுவிட்டரில் நம்பர் 1 - மக்கள் நீதி மய்யம் | வரி பாக்கி : ராம்கி வீட்டிற்கு நோட்டீஸ் | இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | மக்கள் நீதி மய்யம் - கமல் கட்சியின் பெயர் | ரூ.100 கோடியை தொடுமா பேட் மேன்? | சாகித் கபூரின் புதிய படம் துவங்கியது | அய்த்ராஸ் 2 : சுபாஷ் திட்டம் | நாளை முதல் நமஸ்தே இங்கிலாந்து ஆரம்பம் |
நயன்தாரா நடிப்பில் அவரது மானேஜர் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'அறம். இந்த படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் கோபி நயினார் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அறம் படத்தை தொடர்ந்து கோபி நயினார் அடுத்து இயக்கும் படம் எது என்பது பற்றி சஸ்பென்ஸ் நீடித்த நிலையில், சித்தார்த்தை வைத்து இயக்குவதாக செய்தி வந்தது.
வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் தகவல் அடிபட்டது. இந்நிலையில் கோபி நயினார் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க சித்தார்த்துக்கு பதில் ஜி.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதை கோபி நயினார் இயக்கி பின்னர் ட்ராப் செய்யப்பட்ட 'கருப்பர் நகரம்' படத்தின் கதை என்று தகவல்.
'நாச்சியார்' படத்தை அடுத்து 'செம', '100% காதல்', 'சர்வம் தாளமயம்', 'அடங்காதே', 'ஐங்கரன்', 'ரெட்டக் கொம்பு' முதலான படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்! இந்தப்பட்டியலில் தற்போது கோபி நயினாரின் படமும் சேர்ந்துள்ளது.