கட்சி சின்னம் என்ன சொல்கிறது : கமல் விளக்கம் | கமல் கட்சியில் சினிமா பிரபலங்கள் | டுவிட்டரில் நம்பர் 1 - மக்கள் நீதி மய்யம் | வரி பாக்கி : ராம்கி வீட்டிற்கு நோட்டீஸ் | இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | மக்கள் நீதி மய்யம் - கமல் கட்சியின் பெயர் | ரூ.100 கோடியை தொடுமா பேட் மேன்? | சாகித் கபூரின் புதிய படம் துவங்கியது | அய்த்ராஸ் 2 : சுபாஷ் திட்டம் | நாளை முதல் நமஸ்தே இங்கிலாந்து ஆரம்பம் |
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். அடுத்ததாக பிருத்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தை தவிர சொல்லிக்கொள்ளும்படியாக இவருக்கு படம் எதுவும் அமையவில்லை.
ஆனால் இப்போது அதற்கெல்லாம் சேர்த்து மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவர் நடிக்கும் படங்களிலும் ஒரே காலகட்டத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது. ஆம். நிவின்பாலியுடன் மோகன்லால் நடித்து வரும் 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சுதேவ் நாயர்.
அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் 'ஆப்ரஹாமின்டே சந்ததிகள் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் சுதேவ் நாயர்.. மம்முட்டி இல்லாமல் தனது தனிப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்ட சுதேவ் நாயர், வரும் மார்ச்சில் மம்முயுடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.