திருப்பூர்: திருப்பூர் அருகே, தனியார் பஸ்கள் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் இருந்து, தாராபுரத்துக்கு, தனியார் பஸ், நேற்று காலை புறப்பட்டது. காலை, 10:00 மணியளவில், சக்தி விநாயகபுரம் அருகில், அரசு பஸ்சை முந்த முயன்ற போது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர் சென்ற தனியார் பஸ், நேருக்கு நேர் மோதியது. இதில், பஸ்சின் முன்புறம் கடுமையாக சேதமடைந்ததது. படுகாயமடைந்த பயணியர் அலறி துடித்தனர். அருகிலிருந்தவர்கள் ஓடி சென்று, மீட்பு பணிகளில் இறங்கினர். சம்பவ இடத்திலேயே, 40 - 65 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இரு பஸ்களிலும் பயணித்த, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 'தனியார் பஸ்களின் அசுர வேகமே, விபத்துக்கு காரணம்' என, போலீசார் தெரிவித்தனர்.