ஆர்.கே.பேட்டை: புது கணக்கு புத்தகத்தில், இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என, தறிக்கூடங்களில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆர்.கே.பேட்டையில், மாசி மாதம், நான்காம் திங்கட்கிழமையில் தறிக்கூடங்களுக்கு பூஜை நடத்துவது பாரம்பரியமான நிகழ்வு. இதன் படி, நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், கைத்தறி, விசைத்தறி, தார் வைண்டிங் மிஷின், நுால் வைண்டிங் மிஷின் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, தறிக்கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மாவிலை, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன.நேற்று, தறிக்கூடத்தில் மஞ்சளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயக பெருமானுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகருக்கு பச்சரிசி, வெல்லம், பாகு படைக்கப்பட்டது. பூஜையில் புதிய கணக்கு புத்தகம் பிரதானமாக வைக்கப்பட்டது.நடப்பாண்டில், நெசவு தொழில் அமோகமாக நடைபெறவும், தங்களின் வாழ்வாதாரம் மேம்படவும் வேண்டி, நெசவாளர்கள் வபுது கணக்கில் லாபம் கொழிக்க தறி பட்டறைகளில் சிறப்பு பூஜை
ஆர்.கே.பேட்டை, பிப். 20---புது கணக்கு புத்தகத்தில், இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என, தறிக்கூடங்களில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆர்.கே.பேட்டையில், மாசி மாதம், நான்காம் திங்கட்கிழமையில் தறிக்கூடங்களுக்கு பூஜை நடத்துவது பாரம்பரியமான நிகழ்வு. இதன் படி, நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், கைத்தறி, விசைத்தறி, தார் வைண்டிங் மிஷின், நுால் வைண்டிங் மிஷின் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, தறிக்கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மாவிலை, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன.நேற்று, தறிக்கூடத்தில் மஞ்சளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயக பெருமானுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகருக்கு பச்சரிசி, வெல்லம், பாகு படைக்கப்பட்டது. பூஜையில் புதிய கணக்கு புத்தகம் பிரதானமாக வைக்கப்பட்டது.நடப்பாண்டில், நெசவு தொழில் அமோகமாக நடைபெறவும், தங்களின் வாழ்வாதாரம் மேம்படவும் வேண்டி, நெசவாளர்கள் வழிபாடு நடத்தினர். கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் முனீஸ்வரன் கோவில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்றைய பூஜையின் போது, சிறிது நேரம் மட்டுமே இயக்கப்பட்ட தறிகள், இன்று, செவ்வாய்கிழமை முதல், தொடர்ந்து இயங்கும்.ழிபாடு நடத்தினர்.
கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் முனீஸ்வரன் கோவில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்றைய பூஜையின் போது, சிறிது நேரம் மட்டுமே இயக்கப்பட்ட தறிகள், இன்று, செவ்வாய்கிழமை முதல், தொடர்ந்து இயங்கும்.