சூர்யாவுக்கே பாடம் நடத்தியுள்ளார் : ஜோதிகாவுக்கு சிவகுமார் பாராட்டு | கான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் உமி நடிகை | அப்பாவுடன் அரசியலில் பயணிக்கும் திட்டமில்லை: ஸ்ருதிஹாசன் | தும்ஹாரி சுலு ரீமேக்கில் ஜோதிகா | சின்னத்திரையில் மாப்பிள்ளையான ஆர்யா | திமுகவுடன் கூட்டணி? கமல் விளக்கம் | பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் |
மருமகள் ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பது மாமனார் சிவகுமாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்பார்கள். ஆனால் நாச்சியார் படத்தை பார்த்து விட்டு பாலாவை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார். அதோடு ஜோதிகாவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு சமநிலை திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவை வாழ்த்தி வரவேற்போம்.
ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ...? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா...
நாச்சியார் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே (சூர்யா)பாடம் எடுத்துள்ளார். கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்.
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.