எந்த போலீஸ் டாப் ? சிங்கம், சிறுத்தை, நாச்சியார் ? | ஜெயசூர்யா நடிப்பது 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா..? | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் வினீத் சீனிவாசன்..! | மம்முட்டி படத்திற்கு இசையமைக்கும் ஐடியா ஸ்டார் சிங்கர்..! | தமிழுக்குத் தாவிய ரகுல் ப்ரீத் சிங் | டி.வி. நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாரா ஆர்யா ? | திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் : கமல் | இம்ரான் ஹாஸ்மி - ரிஷி கபூரை இயக்கும் ஜீத்து ஜோசப் | கரண் ஜோகர் தயாரிக்கும் ரன்பூமி | சிறிய படங்கள் மோதும் பிப்ரவரி 23 |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்றால் மலையாள சினிமா படைப்பாளிகளின் சாய்ஸாக இருப்பது நடிகர் ஜெயசூர்யா தான், வாய்பேசாத, காதுகேளாத, திக்குவாய் குறையுடைய, ஒரு கால் ஊனமாக என இப்படி பல கேரக்டர்களில் கதைக்காக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தவர்தான் ஜெயசூர்யா.
அந்தவகையில் தற்போது தந்து ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் போஸ்டர் வடிவமைப்பில் சானிடரி நாப்கின் மீது டைட்டில் இடம்பெற்று இருப்பதால் இது சமீபத்தில் வெளியான அக்சய்குமார் நடித்த 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள இயக்குனர் ரஞ்சித் சங்கர், இது முற்றிலும் வேறான கதை என்றும், இதில் புதிய ஜெயசூர்யாவை பார்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.