எந்த போலீஸ் டாப் ? சிங்கம், சிறுத்தை, நாச்சியார் ? | ஜெயசூர்யா நடிப்பது 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா..? | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் வினீத் சீனிவாசன்..! | மம்முட்டி படத்திற்கு இசையமைக்கும் ஐடியா ஸ்டார் சிங்கர்..! | தமிழுக்குத் தாவிய ரகுல் ப்ரீத் சிங் | டி.வி. நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாரா ஆர்யா ? | திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் : கமல் | இம்ரான் ஹாஸ்மி - ரிஷி கபூரை இயக்கும் ஜீத்து ஜோசப் | கரண் ஜோகர் தயாரிக்கும் ரன்பூமி | சிறிய படங்கள் மோதும் பிப்ரவரி 23 |
கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் யுடர்ன். பவன்குமார் இயக்கிய அந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்தார். அந்த படம் தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சமந்தா நாயகியாக நடிக்கிறார். பெண் பத்திரிகையாளரை மையப்படுத்திய கதையில் உருவான இந்த படத்தின் ரீ-மேக்கில் சின்னச்சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்த படத்தில் கதையின் நாயகி வேடம் என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் நடிக்க தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று யுடர்ன் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.
இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால், இப்படத்தில் நடித்து முடித்த பிறகுதான் வேறு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சமந்தா.