மதுரை,''காவிரி விஷயத்தில், அரசின் சார்பாக மற்ற கட்சிகளின் கருத்துக்களை கேட்போம் என முடிவு செய்திருந்தோம். இதை எப்படியோ ஸ்டாலின் தெரிந்து, முந்திக் கொண்டு அனைத்து கட்சி கூட்டம் குறித்து அறிவித்தார்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதா இறந்த பின், முதல்வராக பதவி ஏற்க மறுத்தேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக, சசிகலா தரப்பினர் தான் என்னை வற்புறுத்தினர். முதல்வரான பின், பொறுப்பை உணர்ந்து பணியாற்றினேன். 'வர்தா' புயல்,
ஜல்லிக்கட்டு விவகாரம், சென்னை குடிநீர் தட்டுப்பாடு விஷயத்தில் சிறப்பாக
செயல்பட்டதால், எனக்கு நற்பெயர் கிடைத்தது. இதை பொறுக்க முடியாமல்,கட்டாயப்படுத்தி, என்னை பதவி விலக செய்தனர்.காவிரி விஷயத்தில் வரலாறு தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார்.
அவர்கள் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருந்த போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே. எதிர்க்கட்சி தலைவர் என்பதை, ஸ்டாலின் உணர்ந்து செயல்பட்டாலே போதும்.'அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்ப்பதற்காக, தினகரன், 18 எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளாரா' என, என்னிடம் பிரதமர் மோடி கேட்டார். ஆம் என்றேன். இந்த ஆட்சியைநிலைநிறுத்த, ஜெ., மிகவும் கஷ்டப்பட்டார். அதனால், அணிகள் இணைவது குறித்து
பிரதமரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும், 'இணைவது நல்லது' என்றார்.
இதில் எவ்வித உள் அர்த்தமும் இல்லை; இது
பிரதமரின் பெருந்தன்மையை காட்டுகிறது.
காவிரி நீர் தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் யோசித்தோம். மற்ற கட்சிகளின் கருத்துக்களை கேட்போம் என முடிவு செய்திருந்தோம். இதை எப்படியோ ஸ்டாலின் தெரிந்து, முந்திக் கொண்டு அனைத்து கட்சி கூட்டம் குறித்து அறிவித்தார். நடிகர் கமல் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பின், பேசலாம்.இவ்வாறு கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து