மீண்டும் இணையும் அஜித் - அர்ஜூன் | நடிகர்களை நம்பாதீர்கள் : ரஜினி, கமலை சாடும் சத்யராஜ் | வருத்தத்துடன் பாய்பிரண்டுக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து | சமந்தாவின் யுடர்ன் தொடங்கியது | சமந்தாவுடன் மீண்டும் ரொமான்ஸ் செய்கிறாரா நானி? | மீண்டும் அப்பா ஆகிறார் ஜூனியர் என்டிஆர் | சூர்யாவுக்கே பாடம் நடத்தியுள்ளார் : ஜோதிகாவுக்கு சிவகுமார் பாராட்டு | கான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் உமி நடிகை | அப்பாவுடன் அரசியலில் பயணிக்கும் திட்டமில்லை: ஸ்ருதிஹாசன் | தும்ஹாரி சுலு ரீமேக்கில் ஜோதிகா |
ராம்சரணுடன் ரங்கஸ்தலம் படத்தில் ரொமான்ஸ் செய்துள்ள சமந்தா, அடுத்தபடியாக ஸ்ரீராம் ஆதித்யா இயக்கும் படத்தில் நானியுடன் ரொமான்ஸ் செய்யப்போவதாக டோலிவுட்டில் கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகிக்கொண்டு வந்தது. ஆனால் நேற்று அந்த செய்தி குறித்து நானி ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், சமந்தாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் கிருஷ்ணார்ஜூனா யுத்தம் படத்தை அடுத்து ஸ்ரீராம் ஆதித்யா இயக்கும் படத்தில் எனக்கு ஜோடியாக சமந்தா நடிக்கயிருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. அந்த படத்தில் சமந்தாவை நடிக்க வைப்பது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. வெளியாகியுள்ள இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ள நானி, தற்போது நான் தயாரித்து வெளியாகியுள்ள அவே படத்தின் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சமந்தாவும், நானியும் நான் ஈ(தமிழ்), ஈகா(தெலுங்கு), கெளதம் மேனின் ஏதோ வெள்ளிபோயிந்தி மனசு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.