எந்த போலீஸ் டாப் ? சிங்கம், சிறுத்தை, நாச்சியார் ? | ஜெயசூர்யா நடிப்பது 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா..? | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் வினீத் சீனிவாசன்..! | மம்முட்டி படத்திற்கு இசையமைக்கும் ஐடியா ஸ்டார் சிங்கர்..! | தமிழுக்குத் தாவிய ரகுல் ப்ரீத் சிங் | டி.வி. நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாரா ஆர்யா ? | திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் : கமல் | இம்ரான் ஹாஸ்மி - ரிஷி கபூரை இயக்கும் ஜீத்து ஜோசப் | கரண் ஜோகர் தயாரிக்கும் ரன்பூமி | சிறிய படங்கள் மோதும் பிப்ரவரி 23 |
நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என, மக்கள் ஒரு போதும் நம்பக்கூடாது; அவர்களை தோற்கடிக்க வேண்டும், என, நடிகர் சத்யராஜ் பேசினார்.
சென்னையில், நடந்த விழா ஒன்றில், அவர் பேசியதாவது: நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துள்ளனர்; ஏன், நானே, மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். பிரபல நடிகர்கள் என்பதால், எல்லாம் தெரிந்தவர்கள் என, அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள்; அவ்வாறு நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால், அது, பெரிய தோல்வி அல்ல. வெற்றி பெற்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என, யோசியுங்கள். எனவே, நடிகர்களை அரசியலில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் களம் காண உள்ள நிலையில், அவர்களின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் சத்யராஜ் இவ்வாறு பேசியிருக்கிறார்.