எந்த போலீஸ் டாப் ? சிங்கம், சிறுத்தை, நாச்சியார் ? | ஜெயசூர்யா நடிப்பது 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா..? | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் வினீத் சீனிவாசன்..! | மம்முட்டி படத்திற்கு இசையமைக்கும் ஐடியா ஸ்டார் சிங்கர்..! | தமிழுக்குத் தாவிய ரகுல் ப்ரீத் சிங் | டி.வி. நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாரா ஆர்யா ? | திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் : கமல் | இம்ரான் ஹாஸ்மி - ரிஷி கபூரை இயக்கும் ஜீத்து ஜோசப் | கரண் ஜோகர் தயாரிக்கும் ரன்பூமி | சிறிய படங்கள் மோதும் பிப்ரவரி 23 |
தமிழ்த் திரையுலகத்தில் நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமையக் கூடிய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களாகவே அமையும். ஒரே குடும்பத்தில் மூன்று நடிகர்கள், ஒரு நடிகை இருக்கும் குடும்பம் நடிகர் சிவகுமாரின் குடும்பம்.
அவருடைய மூத்த மகனான சூர்யா, இளைய மகன் கார்த்தி, மூத்த மருமகள் ஜோதிகா ஆகியோர் இப்போது காவல் துறை கதாபாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்கள்.
சூர்யா முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்த காக்க காக்க படத்தை விட அவருக்கு போலீஸ் கதாபாத்திரத்தில் பெயர் வாங்கிக் கொடுத்த படம் சிங்கம். அதன் பின் 2, 3ம் பாகங்களிலும் ஓங்கி அடிச்சால் ஒன்றரை டன் வெயிட்ரா என கதறவிட்டார்.
கார்த்தி, போலீஸ் அதிகாரியாக நடித்த சிறுத்தை படம் அவருக்கு கம்பீரமான தனி அடையாளத்தை, ஹீரோயிசத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ரத்தினவேல் பாண்டியன் ஆக மிடுக்காக நடித்து பலரையும் மிரள வைத்தார்.
இப்போது ஜோதிகா, நாச்சியார் படத்தில் உதவி கமிஷனர் ஆக திமிர் பிடித்த பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். அதிலும் துணை கமிஷனரை போடி என அவர் சொல்லிவிட்டு செல்லும் காட்சியில் தியேட்டர்களில் கைதட்டல் பிளக்கிறது.
பெண்ணாக இருந்தாலும், சூர்யா, கார்த்தியை போலீஸ் நடிப்பில் ஜோதிகா ஓவர்டேக் செய்துவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள்.