புதுடில்லி: பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வெளிவந்துள்ள நிலையில், மோசடி செய்வதற்கு, வைர வியாபாரம் பெரிய அளவில் உதவி வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பல அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
பிரபல வைர வியாபாரியான, நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளன என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
நிரவ் மற்றும் அவரது மனைவி, சகோதரர் உள்ளிட்டோர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர்.நிரவ் மோடி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் செய்த மோசடிகள் குறித்து, ஒரு வாரமாக, தினமும் புதுப் புது செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில், வைர வியாபாரம் என்பது, மோசடிகாரர்களுக்கு பெரிய அளவில் உதவி வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நிரவ் மோசடி குறித்து, சி.பி.ஐ., விசாரித்து
வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து அந்த வங்கியும், ரிசர்வ் வங்கியும் விசாரித்து வருகின்றன.
இந் நிலையில், நிரவின் நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்தும், செய்துள்ள
மோசடிகள் குறித்தும், 'செபி' எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பு
விசாரிக்கிறது.
நிரவின் நிறுவனங்களில் இயக்குனராக உள்ள,மெஹுல் சோக்சியின், 'கீதாஞ்சலி' என்ற வைர நகை நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், செபி விசாரிக்கிறது.இந்த நிலையில், நிரவ் மற்றும் சோக்சி இயக்குனராக உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு போலி நிறுவனங் கள் குறித்து, கம்பெனி விவகாரங்கள் துறை விசாரித்து வருகிறது.நிரவ் பல்வேறு நிறுவனங் களின் இயக்குனராக உள்ளார். அதே நேரத்தில், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் அவர் இயக்குனராக இல்லை.
இது கம்பெனி விவகாரங்கள் துறைக்கு ஆச்சரித்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், 150க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரும் அடிப்படுகின்றன. அது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இதுபோன்ற மோசடியில், வைர வியாபாரத்தில் உள்ள பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. பங்குச் சந்தையிலும், பல மோசடியில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
வைரத்தை
மதிப்பீடு செய்வது என்பது சற்று சிரமமானது என்பதால், அதைப் பயன்படுத்தி,
இதுபோன்ற நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்குவது உள்ளிட்டவற்றில், மோசடி ஆவணங் களை தாக்கல் செய்து ஏமாற்றி வந்துள்ளன.
மேலும், கறுப்புப் பணத்தை பதுக்குவது, பண மோசடி செய்வது போன்ற வற்றுக்கும், வைர வியாபாரம் உதவி செய்து வந்துள்ளது. சமீப காலத்தில் பல மோசடி வைர வியாபார நிறுவனங்கள் இவ்வாறு சிக்கி உள்ளன. இது தொடர்பாக, பல விசாரணை அமைப்புகளும் விசாரித்து வருகின்றன.
வங்கி புதிய தகவல்
வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள பிரபல வைர, வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர், வெளி நாடு தப்பிச் சென்றுள்ளனர். இந்த மோசடி குறித்து, 'செபி' எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள புதிய ஆவணத்தில் கூறியுள்ளதாவது:வங்கியிடம் வாங்கிய கடனைச் செலுத்தும்படி, நிரவ் மோடி தொடர் புடைய நிறுவனங்கள் மற்றும் கீதாஞ்சலி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், ஜன. 16ம் தேதி பேசினோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து