திமுகவுடன் கூட்டணி? கமல் விளக்கம் | பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 |
சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் டிரைலர் எப்போது ரிலீசாகும் என அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் மே 8 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் தத் நடித்த முதல் படமான ராக்கி 1981 ம் ஆண்டு மே 8 ல் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த படத்தை சுனில் தத் இயக்கி இருந்தார். இதனால் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் டிரைலரை மே 8 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம். சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை ராஜ்குமார் ஹிரானி தயாரித்து, இயக்குகிறார். அவருடன் இணைந்து விது வினோத் சோப்ரா இப்படத்தை தயாரிக்கிறார்.
சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் வரும் ஜூன் 29 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடிக்க உள்ளார்.