திமுகவுடன் கூட்டணி? கமல் விளக்கம் | பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 |
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் இயக்கி வரும் படம் “ அருவா சண்ட “ . இந்தப் படத்தின் ஹீரோயின் அறிமுக பாடல் காட்சி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நடந்தது. தரண் இசையில் வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக...“ என்ற பாடல் படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன் அணிந்து கொள்ள மிக கவர்ச்சியான ஆடை கொடுத்து அதை அணிந்துதான் ஆட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர்.
இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். கடைசியில் வேறு சில உடைகளை தைத்துக் கொடுத்தார் இயக்குநர். பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி ஆடியுள்ளார்.