பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 | பலாத்கார முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் சனுஜா ரகசிய வாக்குமூலம் |
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினியை, கமல் சந்தித்து பேசி உள்ளார்.
பிப்ரவரி 21 ல் கமல் தனது சுற்றுப் பயணத்தை துவக்க உள்ள கமல், இன்று ரஜினியை சந்தித்து பேசி உள்ளார்.
ரஜினி, கமல் இருவரும் அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவித்திருந்தனர். பிப்ரவரி 21 ம் தேதி தனது அரசியல் சுற்றுப் பயணத்தை துவக்குவதுடன், கட்சியின் பெயரையும் அறிவிக்க உள்ளதாக கமல் அறிவித்திருந்தார். அவரின் சுற்றுப்பயண அட்டவணை விபரமும் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த கமல், திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் நடைபெறும் என கூறி இருந்தார்.
இந்நிலையில் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன் முதல் முறையாக கமல், ரஜினியை சந்தித்துள்ளார். அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பிறகு இருவரும் முதல் முறையாக சந்தித்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. நட்பு தான் இந்த சந்திப்பின் பிரதானம். எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தை துவக்க உள்ளேன். அதற்கு முன் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வருகிறேன்.
இணைந்து பணியாற்றுவது குறித்தும் ரஜினியுடன் கூறி உள்ளேன். அது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். எனது அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார் என்றார்.