புதுடில்லி:''ஜனநாயகத்தை, பா.ஜ., மிக உயர்வாக மதிக்கிறது; அதனால், கூட்டணி கட்சிகளை, வெற்றிகரமாக அரவணைத்து செல்ல முடிகிறது,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பா.ஜ.,வின் புதிய தலைமையக கட்டடத்தை, டில்லியில் நேற்று, பிரதமர், மோடி திறந்து வைத்தார்.அவர் பேசியதாவது:பா.ஜ.,வும்,அதன் முன்னோடியான, பாரதிய ஜனசங்கமும், நாடு
சுதந்திரம் பெற்றது முதல், தேச நலனுக்காக, அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன. ஜனநாயகத்தை, பா.ஜ., மிக
உயர்வாக மதிக்கிறது; அதனால், கூட்டணி கட்சிகளை, வெற்றிகரமாக அரவணைத்து
செல்ல முடிகிறது.
பா.ஜ., தேசப்பற்று என்னும் வண்ணத்தில்
தோய்க்கப் பட்டது.நாட்டு நலனுக்காக போராடவும், தியாகங்கள் செய்யவும்,
பா.ஜ., எப்போதும் தயாராக உள்ளது. சுதந்திர போராட்டத்தில், காங்., கட்சியைச்
சேர்ந்த பலதலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சுதந்திரத்துக்கு பின், அதில் இருந்து பிரிந்து, தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட, புதிய கட்சிகளை துவக்கினர்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மும்பை துறைமுகம்: புதிய பிரிவு துவக்கம்:
மஹாராஷ்டிர மாநிலம்,
நவிமும்பையில், ஜே.என்.பி.டி., துறைமுகத் தின், நான்காவது பிரிவு திட்டத்தின் முதற்கட்ட பணிகள்நிறைவடைந்ததை அடுத்து, அந்த பிரிவை, பிரதமர், நரேந்திர மோடி, நேற்று, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் முதற்கட்ட பணிகள், 7,900 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப் பட்டு உள்ளன. இதன் மூலம், இந்த துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறன், 50 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஜே.என்.பி.டி., துறைமுகத்தின், நான்காவது பிரிவு திட்டத்தின் இரண்டாவது கட்ட பணிகள், 2022ல், முழுமை அடையும் பட்சத்தில், ஆண்டுக்கு, ஒரு கோடி கன்டெய்னர்களை கையாள முடியும். அப்போது, உலகின், 33வது பெரிய துறைமுகம் என்ற பெருமையை, இத்துறைமுகம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவில், ஆண்டுக்கு, இரண்டு கோடி கன்டெய்னர்களை கை யாளும் திறன் பெற்ற, 15 துறைமுகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து