பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 | பலாத்கார முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் சனுஜா ரகசிய வாக்குமூலம் |
கடந்த சில நாட்களாக இணையதளம் மற்றும் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாபிக்காக இருப்பது மலையாள சினிமா பாடலான 'மாணிக்ய மலராய பூவி' பாடலும் அதில் புருவங்களை உயர்த்தி இளைஞர்களின் மனதை கிறங்கடித்த ப்ரியா வாரியரும் தான். எந்தளவுக்கு இந்தப்பாடலுக்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவுக்கு இந்தப்பாடல் குறித்த சர்ச்சைகளும் கிளம்பின.
இருந்தாலும் இந்தபாடலுக்கு கருத்து சுதந்திரம் என்கிற அடிப்படையில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். ஆனால் முதல்வரின் இந்த செயலுக்கு மலையாள நடிகரும் இயக்குனருமான ஜாய் தாமஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் படக்குழுவினரின் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நீங்கள், சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் வாய்மூடி இருப்பது ஏன்..? ஒருவேளை குற்றவாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவு தருகிறீர்களோ” என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார் ஜாய் தாமஸ்.