சசிகலா குடும்பத்தினரின், தமிழக சொத்து களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வரும்,வருமான வரித்துறை,அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு கள் குறித்தும், விசாரணையை துவக்கியுள்ளது.
இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்குகிறது. அதனால், சசி உறவுகளுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து களை வாங்கி குவித்துள்ளனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, சென்னையில், 117
இடங்கள் உட்பட,தமிழகத்தில், 215 இடங்களில், 2017 நவம்பரில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
மதுபான ஆலை:மேலும், ஜெயா, 'டிவி' மற்றும், 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழ் அலுவலகம்; காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள, 'மிடாஸ்' மதுபான ஆலை; சென்னை, வேளச்சேரியில்
உள்ள, 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனம்.ஜெ., உதவியாளர், பூங்குன்றனின் வீடு,
இளவரசி மகன், விவேக், அவரது சகோதரிகள், கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்டோரின் வீடுகள் என, ஐந்து நாட்கள், இந்த சோதனை தொடர்ந்தது.அதன் தொடர்ச்சியாக, சென்னையில், ஜெ., வசித்த போயஸ் தோட்ட இல்லத்திலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அங்குள்ள சசிகலா அறையில், 'லேப் - டாப், பென் டிரைவ்' மற்றும் ஜெயலலிதாவுக்கு, டி.ஜி.பி., அசோக்குமார் எழுதிய, ரகசிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின. இச்சோதனை யில் இதுவரை, 5,000 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சசிகலா குடும்பத்தினரின் தமிழக சொத்துகளை பறிமுதல் செய்ய, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு பரிவர்த்தனை
குறித்த விசாரணையையும்துவக்கி உள்ளது. இதனால், சசி கும்பலுக்கு சிக்கல் அதிகரித்து உள்ளது.
முடக்கியது
இது குறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு தலைமையக அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா குடும்பத்தினர், 1996க்கு பின், குறிப்பாக, ஜெ., மீண்டும் ஆட்சிக்கு வந்த, 2001க்குப் பின், ஏராளமான போலி நிறுவனங் களை துவக்கியுள்ளனர். அதில், சில நிறுவனங் கள், பெயரளவுக்கு இயங்கியதால், அவற்றை மத்திய அரசு முடக்கியது. நாங்கள் நடத்திய சோதனையின் போது, சசி கும்பலுக்கு சொந்த மான, 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங் களின், 100க்கும் அதிகமான வங்கிக் கணக்கு களை முடக்கினோம்.
தற்போது, அந்த போலி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆராயத் துவங்கியுள்ளோம். அதில், சில நிறுவனங்கள், அன்னிய பரிவர்த்தனை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை முழுமையாக ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அன்னிய பரிவர்த்தனை தொடர்பான வழக்காக இது மாறுவதால், மத்திய அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்கவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (44)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply