பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 | பலாத்கார முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் சனுஜா ரகசிய வாக்குமூலம் |
நடிகை அமலாபால் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். அந்த வகையில், திருமணம் விவாகரத்துக்குப் பிறகும் கதாநாயகியாகவே நடித்து வரும் அமலாபால், கடந்த சில மாதங்களாக பரபரப்பு வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்.
அதாவது, புதிய கார் வாங்கியதில் ஏற்பட்ட வரி பிரச்சினையில் சில மாதங்களாக பரபரப்பு செய்தியாகி வந்தார். அதையடுத்து தொழிலதிபர் ஒருவர் தன்னை ஆசைக்கு இணங்க அழைத்ததாக அவரை போலீசில் சிக்க வைத்து இன்னொரு பரபரப்பை உருவாக்கினார் அமலாபால்.
இந்த நிலையில், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் தங்களது காதலர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடி அந்த போட்டோக்களை இணைய பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அமலாபாலும் காதலர் தினம் கொண்டாடிய ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடவில்லை. தனது வீட்டு செல்ல நாய்குட்டியுடன் கொண்டாடியிருக்கிறார்.