அ.தி.மு.க., அணிகள்இணைந்த பின், சில மாதங்களாக அமைதி காத்த, துணை முதல்வர், பன்னீர்செல்வம், திடீரென அணிகள் இணைப்பு பின்னணி குறித்தும், சசிகலா குடும்பத்தினர் செய்த தீங்குகள் குறித்தும் பேசியிருப்பது, பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.அவரது பேச்சின்பின்னணி குறித்து,முதல்வர் தரப்பினரும் விசாரித்து வருகின்றனர்.
ஜெ., மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் முதல்வரானார். அவரை ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா,முதல்வர் ஆக முயற்சித்தார். அதை எதிர்த்து, பன்னீர் போர்க்கொடி துாக்கினார். அவர் பின்னால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணி வகுத்ததால், தனி அணியாகச் செயல்படத் துவங்கினார்.
சொத்து குவிப்புவழக்கில், சிறை தண்டனை பெற்றதால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. வேறு வழியின்றி, பழனிசாமியை முதல்வராக்கினார். அவர் முதல்வரானதும்,
மத்திய அரசுடன் நெருக்கமானார்.சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டினார். அதன் தொடர்ச்சியாக, பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைந்தன. தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, அ.தி.மு.க.,கட்சி மற்றும் சின்னத்தையும் மீட்டனர். இணைப்பு பின்னணியில்,பிரதமர் மோடி இருப்பதாக, அப்போதே அரசல்புரசலாகபேச்சு எழுந்தது. இணைப்புக்கு பின், பதவிகள் பங்கிடப் பட்டன.
அதில், பன்னீர்செல்வம்துணை முதல்வராக வும், அ.தி.மு.க., ஒருங்கிணைப் பாளராகவும் பொறுப்பேற்றார்.எனினும், அவரால் தன் ஆதரவாளர்களுக்கு, பதவிகளை பெற்றுத் தர இயலவில்லை. சக அமைச்சர்களிடமும், முக்கியத்துவம் இல்லை என்ற புகார் எழுந்த
படி உள்ளது.இந்த சூழ்நிலையில்,நேற்று முன்தினம், தேனி மாவட்டத்தில் நடந்த, ஜெ., பிறந்த நாள் ஆலோசனைக்
கூட்டத்தில், பன்னீர்செல்வம் பேசியது, ஆளும் கட்சி வட்டாரத்தில், அதிர்வை
ஏற்படுத்தி உள்ளது.
அவர் பேசியதாவது:நான் பழனிசாமி
அணியுடன் இணைவதற்கு முன், மரியாதை நிமித்தமாக,பிரதமரை சந்தித்தேன். அப்
போது அவர், 'தற்போதுள்ள சூழ்நிலையில், கட்சியைக்காப்பாற்ற, நீங்கள் இணைய வேண்டும்' என்றார்.நானும், 'சரி இணைந்து விடுகிறேன். எனக்கு கட்சி பதவி போதும்; அமைச்சர் பதவி வேண்டாம்' என்றேன். அவர், 'இல்லை,நீங்கள் அமைச்சராக இருக்க வேண்டும்' என்றார். அதனால் தான், இன்று அமைச்சராக உள்ளேன். பிரதமரிடம் கூறியதை, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணியிடமும் கூறினேன்;அவர்களும், 'நீங்கள் அமைச்சராக இருக்க வேண்டும்' என்றனர்.
எனக்கு அமைச்சர்பதவி மீது, ஆசை இல்லை. நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். இரண்டு முறை,ஜெயலலிதாவே, முதல்வர்பதவியை கொடுத்தார். இந்த பெருமையே எனக்கு போதும். ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் எழுதி தந்து, மீண்டும் சேர்ந்தார் சசிகலா. அந்த நேரத்தில், ஜெ., என்னை அழைத்து, 'தினகரனோடு பேசுகிறீர்களா' எனக் கேட்டார்.'நீங்கள் கூறிய பின் பேசுவதில்லை' என்றேன்.'நான் உயிரோடுஇருக்கும் வரை, அவனைஎன் வீட்டு வாசலில் நுழைய விட மாட்டேன்' என, ஜெ., கூறினார்.எதற்காக, அப்படிகூறினார் என, விளக்கம் கேட்க முடியாது. 'சரி' என்று மட்டும் பதில் அளித்தேன். 'நீங்கள் ஒருவர் மட்டுமாவது, விசுவாசமாக இருங்கள்' என, என்னிடம் ஜெ., கூறினார்.
ஜெ.,க்கு விசுவாசமாக இருந்ததால், சசி குடும்பம்,'என்னை துரோகி'என்றது. எனக்கு,2016 தேர்தலில், 'சீட்'தரக்கூடாது என, போராடினர்.அதை மீறி, ஜெ., சீட்
கொடுத்தார். தோற்கடிக்க, தினகரன்,தங்க தமிழ்செல்வன் போன்றோர் வேலை
பார்த்தனர். நான், இதை வெளியில் கூறவில்லை; யார் மீதும் பழி
போடவில்லை.'இந்த தேர்தலில், பன்னீர்செல்வம் உறுதியாக தோற்பான். உடுத்தி இருந்த வேட்டியோடு, அவன்வீட்டுக்கு செல்ல வேண்டும்' என,சசிகலா ஆவேசமாக கூறிய
தகவல், எனக்கு தெரிய வந்தது.அவரால், எனக்கு நேர்ந்த கொடுமைகளில், 1 சதவீதத்தையே கூறியுள்ளேன்.
மீதமுள்ள, 99 சதவீதம், இதுபோல் கோபம் வரும்போது வெளியில் வரும். எனக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு அளவே கிடையாது. வேறு நபராகஇருந்திருந்தால், தற்கொலை செய்திருப்பார் அல்லது கட்சியேவேண்டாம் என, ஓடி இருப்பார். நான் ஜெ.,வுக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டேன்.இவ்வாறு அவர்பேசினார்.
துணை முதல்வர்திடீரென, இணைப்பு பின்னணி குறித்தும், சசிகலா குடும்பம் இழைத்த தீங்குகள் குறித்தும் பேசியிருப்பது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., நெருக்குதலால், பழனிசாமியுடன் இணைந்த பின், பா.ஜ., மேலிடம், பன்னீரை கண்டு கொள்ள வில்லை. தமிழக அரசை, பா.ஜ., தலைவர்கள் வசைபாடத் துவங்கி உள்ளனர்.இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கவும், 'தேவைப்பட்டால், தனி அணி காண தயங்க மாட்டேன்' என, பழனிசாமி தரப்புக்கு எச்சரிக்கை விடுக்கவும், அவ்வாறு அவர் பேசியிருக்கலாம் என்றும்கூறப்படுகிறது.
துணை முதல்வரின் பேச்சு, முதல்வர் தரப்பிலும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேச்சின் பின்னணி குறித்து, அவர்களும் விசாரித்துவருகின்றனர். 'பன்னீர்செல்வம்சிந்தித்து பேசக் கூடியவர்; ஏதோ திட்டத்துடன் தான், இவ்வாறு பேசி உள்ளார்' என, பழனிசாமி ஆதரவாளர்கள் நம்புகின்றனர். - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (41)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply