பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 | பலாத்கார முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் சனுஜா ரகசிய வாக்குமூலம் |
'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அதற்கு முன்னதாகவே அதாவது தனது இரண்டாவது படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் நரேன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தான் இயக்கவிருக்கும் மூன்றாவது படத்திற்கு 'நாடக மேடை' என்று தலைப்பு வைத்துள்ள கார்த்திக் நரேன் இந்த படத்தை தனது 'நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்' என்ற பட நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கிறார். இரண்டாவது படம் திரைக்கு வருவதற்கு முன்பே மூன்றாவது பட அறிவிப்பை அவசர அவசரமாக கார்த்திக் நரேன் வெளியிட்டது ஏன்?
அடுத்தப் படத்தையும் தன்னுடைய பேனரிலேயே இயக்க வேண்டும் என்று கௌதம் மேனன் கார்த்திக் நரேனை வற்புறுத்துகிறாராம். அவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே நாடக மேடை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புத்திசாலியான இயக்குநர் தான்.
இந்த படத்தில் சுஜித் சரங் ஒளிப்பதிவாளராகவும், ரோன் ஏத்தன் யோஹன் இசை அமைப்பாளராகவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பாளராகவும், சிவசங்கர் கலை இயக்குனராகவும் பணிய புரியவிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களை கார்த்திக் நரேன் விரைவில் அறிவிக்க உள்ளார்.