Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ

17 பிப், 2018 - 18:21 IST
எழுத்தின் அளவு:
Feb-21-:-Kamal-tour-detail-released

பிப்.,21ல் கமல் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

அரசியலில் இறங்க போவதாக அறிவித்துள்ள கமல் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். பிப்.21ல் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார். இதற்கு நாளை நமதே என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அன்றைய தினமே மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமலின் சுற்றுபயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அன்று காலை 7.45 மணிக்கு அப்துல் கலாம் இல்லத்திற்கு வருகிறார்.

காலை 8.15 மணிக்கு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கும் வரும் அவர் காலை 8.50 மணியளவில் கணேஷ் மஹால் பகுதியில் மீனவர்களை சந்திக்க உள்ளார்.

காலை 11.10 மணியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு வரும் அவர் அங்கிருந்து 11.20 மணிக்கு மதுரை கிளம்புகிறார்.

நண்பகல் 12.30 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

பிற்பகல் 2.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம்

பிற்பகல் 3 மணிக்கு மானாமதுரை ஸ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்

மாலை 5 மணிக்கு மதுரை வேளாண்மை பல்கலைகழகத்திற்கு எதிரே உள்ள ஒத்தக்கடை மைதானத்திற்கு வரும் அவர், 6 மணிக்கு கட்சி கொடி ஏற்றுகிறார்.

மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இரவு 8.10 முதல் 9 மணி வரை உரையாற்ற உள்ளார்.

Advertisement
சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ... எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா
Tamil New Film Iravukku Aayiram Kangal
Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in