காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால் | விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் | இத்தாலி மொழியில் சிவகுமாரின் மகாபாரத புத்தகம் | எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் | ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ | சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் | விடுமுறை ராஜாவாக சீமராஜா | புது கன்னிராசியிலும் பாண்டியராஜன் | ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா' | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2' |
நடித்த கலகலப்பு 2ம் பாகம் சமீபத்தில் வெளியானது. அடுத்து அவர் நடித்து முடித்துள்ள கீ படம் வெளிவர இருக்கிறது. கொரில்லா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்கு இடையில் அவர் ராஜு முருகன் இயக்கும் ஜிப்ஸி படத்தில் நடிக்கிறார். ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனத்தின் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, 'அருவி' படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 'நாச்சியார்' படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். அத்துடன் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்கும் நாயகி மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹீரோயின் இல்லாமலேயே படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நடந்தது. இயக்குனர்கள் பா. ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா, தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ் ஆர் பிரபு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இது ஒரு பயணக் கதை என்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. அதில் ஜீவா மட்டுமே நடிக்க வேண்டிய வெளிமாநில காட்சிகளை முன்பே படமாக்கிவிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.