செல்ல நாய்க்குட்டியுடன் காதலர் தினம் கொண்டாடிய அமலாபால் | கிசுகிசுக்களைப்பற்றி கவலைப்படாத டாப்சி | ரகுல் பிரீத்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி | ரஜினியின் 2.ஓ 2019-ல் ரிலீஸ்? | வெரைட்டியான காதல் கதைகள் தேடும் பிரபாஸ் | காது கேளாதவர் வேடத்தில் ராம்சரண் | சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் சீமராஜா | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் |
பாகுபலி படத்தில் சரித்திர கதையில் நடித்து இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். ஆனால் அதன்பிறகும் அவரைத்தேடி அதே போன்ற சரித்திர கதைகள் வந்தபோது சரித்திர கதைகளுக்கு சிறிது பிரேக் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லி, சாஹோ படத்தில் கமிட்டானார். ரொமான்டிக் கதையில் உருவாகி வரும் அந்த படத்தில் இந்தி நடிகை ஸ்ரத்தா கபூருடன் நடித்து வருகிறார்.
மேலும், இந்த படத்திற்காக தனது தோற்றத்தை ஸ்டைலிசாக மாற்றி நடிக்கும் பிரபாஸ், அடுத்தடுத்து சில காதல் கதைகளில் நடிக்கப்போகிறாராம். ஆனால் அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாறுபட்ட காதல் கதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள பிரபாஸ், இன்னும் நிறைய மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதனால் தற்போது வித்தியாசமான கதைகள் பக்கம் திரும்பியுள்ள அவர், இளவட்ட இயக்குனர்களை அழைத்து தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.