திருப்பூர்;திருப்பூர், அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது. காளைகளும், காளையர்களும் விளையாட களம்தயார் நிலையில் உள்ளது.
திருப்பூர் அரு@கயுள்ள அலகுமலையில், நாளை காலை, 8:00 மணி முதல், ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக, அலகுமலை அடிவாரத்தில், 27 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, களம் தயார் செய்யப்பட்டுள்ளது. காளைகளும், காளையர்களும் விளையாட, மொத்தம், 600 அடி நீளத்தில் களம் தயாரிக்கப்பட்டு, @தங்கா# மஞ்சி பரப்பப்பட்டுள்ளது.
இரண்டு புறங்களும், 30 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில், கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டை பார்க்க வரும் பொதுமக்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பல்லடம், திருப்பூர், காங்கயம் கிளைகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அலகுமலை, சிவன் கோவில் அருகில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.அதே போல், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு, வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், பெருந்தொழுவு, அலகுமலை வித்யாலயம் வழியாக வந்து, பார்க்கிங் செய்து, போட்டி நடக்கும் பகுதிக்கு வர வேண்டும்.பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட தெற்கு பகுதியிலிருந்தும், காங்கயம் உள்ளிட்ட கிழக்கு பகுதி வழியாக வரும் வாகனங்கள், கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து, வேலாயுதம்பாளையம் வழியாக அலகுமலை வர வேண்டும்.
முக்கிய பிரமுகர்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை, பெருந்தொழுவு வழியாக வந்து, அலகுமலை அடிவாரத்தில் பார்க்கிங் செய்ய வேண்டும். பாதுகாப்பு பணியில், 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு, கால்நடைத்துறை சார்பில் ஒரு குழுவும், போட்டியின் போது, காயம் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், மொபைல் டாக்டர் குழுவும் தயார் நிலையில் உள்ளது.மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்ய ஒரு மருத்துவ குழு, காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க, சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு, பொதுமக்களுக்கான மருத்துவ வசதிக்காக, ஒரு மருத்துவ குழு ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.மேலும், வளாகத்தை சுற்றிலும், ஆறு இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படுகிறது.குடிநீர் வசதிக்காக, கேலரி அமைந்துள்ள பகுதிகளில், தலா ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 15 தொட்டிகள் வைக்கப்படுகின்றன. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படு
கிறது. ஜல்லிக்கட்டு விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை வகிக்கிறார்.போட்டிகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை, சபாநாயகர் தனபால் வழங்குகிறார். எம்.பி.,க்கள் Œத்தியபாமா, ம@கந்திரன், எம்.எல்.ஏ., நடராஜன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை, அலகுமலை திருப்பணி குழு தலைவர் சின்னு, ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் தூரன்நம்பி, பொருளாளர் சுப்ரமணி, துணை தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் சத்தியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
முக்கிய பிரமுகர்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை, பெருந்தொழுவு வழியாக வந்து, அலகுமலை அடிவாரத்தில் பார்க்கிங் செய்ய வேண்டும். பாதுகாப்பு பணியில், 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு, கால்நடைத்துறை சார்பில் ஒரு குழுவும், போட்டியின் போது, காயம் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், மொபைல் டாக்டர் குழுவும் தயார் நிலையில் உள்ளது.