கடலுார்: வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் கோபால் (எ) திருமலை; 37; இவரை கடந்த ஆண்டு செயின் பறிப்பு வழக்கில் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர். இவரது குற்ற செயல்களை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., விஜயகுமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கைது செய்ய உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள திருமலையிடம் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.