புதுடில்லி,:இந்தியா வந்துள்ள, ஈரான் அதிபர், ஹஸன் ரூஹானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, முக்கியத்துவம் வாய்ந்த, ஒன்பது ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. இருதரப்பு வர்த்தகத்துக்கு, நம் நாட்டு ரூபாய், ஈரான் கரன்சியான ரியால் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் ஒப்புக் கொண்டனர்.
ஈரான் அதிபர், ஹஸன் ரூஹானி, மூன்று நாள் பயணமாக, 15ல் இந்தியா வந்தார். முதல் நாளில், தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், பல்வேறு முஸ்லிம் மத குழுக்களுடன், ரூஹானி பேச்சு நடத்தினார். அப்போது, 'அனைத்து குழுக்களும், உள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.மேலும், உலக நாடுகளுடன் நட்புறவை பேணுவதில், ஈரான் ஆர்வமாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் அமைதி ஏற்பட வேண்டும் என விரும்புவதாகவும், ரூஹானி கூறினார்.
நேற்று முன்தினம், ஐதராபாதில் உள்ள மசூதிக்கு சென்ற ரூஹானி, தொழுகையை முடித்து விட்டு, முஸ்லிம்கள் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த மசூதிக்கு வருகை தரும், முதல், ஈரான் அதிபர், ரூஹானி என்பது
குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியில் நேற்று, இந்தியாவைச் சேர்ந்த உயர் மட்ட குழுவினருடன், ஈரான் நாட்டு குழுவினர், பல்வேறு துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்தினர்.
இதில் இணக்கம் ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி - ரூஹானி முன்னிலையில், மருத்துவ துறையில் ஒத்துழைப்பு, 'விசா'
விதிகள் தளர்வு, ஈரானில் உள்ள,சபாஹார் துறைமுக மேம்பாட்டுக்கு உதவி
உட்பட, ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. அதன் பின், மோடி - ரூஹானி வெளியிட்ட கூட்டு அறிக்கையில், 'இந்தியா - ஈரான் நாடுகள், பரஸ்பரம், ஒன்றையொன்று மதிக்கின்றன. இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுவடைந்து உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோடி கூறியதாவது:
ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய, சபாஹார் துறை முகம் மூலம் வழி ஏற்படுத்திக் கொடுத்த, ஈரான் அதிபரின் தொலைநோக்கு பார்வை பாராட்டுக் குரியது. இதற்காக,அவருக்கு நன்றிதெரிவிக்கிறேன். ஆப்கன், பாதுகாப்பாகவும், செழிப்பா கவும் திகழ, இந்தியாவும், ஈரானும் விரும்புகின்றன. நம் அண்டை நாடுகள், பயங்கரவாத தொல்லையில் இருந்து விடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஈரான் அதிபர், ரூஹானி கூறுகையில், ''பிரதமர் மோடியின் அன்பான உபசரிப்பு பாராட்டுக் குரியது. இந்தியா - ஈரான் இடையிலான நட்புறவு, வர்த்தகம் தாண்டியது; வரலாற்று சிறப்பு வாய்ந்தது,'' என்றார்.
இந்தியா - ஈரான் இடையே, இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதில் மற்றொரு சிறப்பம்ச மாக, இருதரப்பு வர்த்தகத்துக்கு, நம் நாட்டு
ரூபாய்,ஈரான் கரன்சியான ரியால் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான
சாத்தியக்கூறுகளை ஆராய, இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் ஒப்புக்
கொண்டனர்.
பாக்.,கிற்கு மூக்குடைப்பு!
பாக்., நிலப்பகுதி வழியாக, சாலை மார்க்கமாக, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுடன், இந்தியா, வர்த்தகம் செய்வதற்கு, பாக்., அனுமதி மறுத்தது. இதையடுத்து, இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள், ஆப்கன் - மத்திய ஆசிய நாடுகளுக்கான வர்த் தக பாதையை உருவாக்க முடிவு செய்தன. ஓமன் வளைகுடாவில், சபாஹார் துறை முகத்தை உருவாக்கவும், அதனுடன் தொடர் புடைய சாலைகள், ரயில் பாதைகள் உருவாக்க வும், 3,500 கோடி ரூபாய் அளிப்பதாக, 2016ல், இந்தியா கூறியது. இதன்படி, துறைமுகம் அமைப்பதில், ஈரானுக்கு, இந்தியா உதவி வருகிறது.
இந்த துறைமுகம் மூலம், பாகிஸ்தானின் உதவியின்றி, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் இடையே வர்த்தகம் செய்வது எளிதாகும். கடந்தாண்டு, அக்டோபரில், இந்தியாவில் இருந்து, கடல் வழியாக கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட,கோதுமை கன்டெய்னர், சபாஹார் துறைமுகம் மூலம் ஆப்கனை சென்றடைந்தது.
இந்தியா வந்துள்ள ஈரான் அதிபர், ஹஸன் ரூஹானி, பிரதமர் மோடி முன்னிலையில், சபாஹாரில் உள்ள, பெஹெஸ்தி துறைமுக பணிகள் மேம்பாடு தொடர்பாக, ஈரான் துறை முகம் மற்றும் கடல்சார் பணிகள் நிறுவனத்துக் கும், இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே, நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (15+ 52)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply