விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் | இத்தாலி மொழியில் சிவகுமாரின் மகாபாரத புத்தகம் | எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் | ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ | சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் | விடுமுறை ராஜாவாக சீமராஜா | புது கன்னிராசியிலும் பாண்டியராஜன் | ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா' | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2' | நாடக மேடைக்குப் பின்னால் ஒரு நாடகம் |
இரான் ஹாஸ்மி நடித்துள்ள சீட் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதியை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் 2019 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். முன்னதாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
நமது நாட்டின் கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டது தான் சீட் இந்தியா படத்தின் கதை. சவுமிக் இயக்கி உள்ள இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இரான் ஹாஸ்மி பிலிம்ஸ் மற்றும் எலிப்சிஸ் என்டர்டைன்மன்ட் நிறுவனமும் டி சீரிஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளதால், இப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஹிருத்திக் ரோஷனின் சூப்பர் 30 படமும் 2019 ஜனவரி 25 அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், ஹிருத்திக் ரோஷன் படத்துடன் சீட் இந்திய படம் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.