காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால் | விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் | இத்தாலி மொழியில் சிவகுமாரின் மகாபாரத புத்தகம் | எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் | ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ | சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் | விடுமுறை ராஜாவாக சீமராஜா | புது கன்னிராசியிலும் பாண்டியராஜன் | ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா' | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2' |
சமீபத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வந்த படத்திற்கு 'சீமராஜா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டைட்டிலுடன் கூடிய இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டது.
அதன்படி 'சீமராஜா' படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று நள்ளிரவு வெளியானது. சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் பரிசாக 'சீமராஜா' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டடுள்ளனராம். 'சீமராஜா' படத்தின் பர்ஸ்ட் லுக்கிலேயே படம் விநாயக சதுர்த்திக்கு ரிலீசாகவிருக்கிறது என்ற அறிவிப்பும் இடம் பெற்றிருக்கிறது.
இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்ததோ இல்லையோ... விநியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். தன்னுடைய படத்தை தொடர் விடுமுறையில் ரிலீஸ் செய்து வசூலை அள்ளுவதை தன்னுடைய வெற்றி பார்முலாவாக வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதையே இந்தப்படத்திலும் கையாண்டுள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை ரிலீஸ் செய்யவும் இப்படித்தான் விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, கிருஸ்துமஸ் என்று விடுமுறை நாட்களை தேடினார்கள். இப்போதும் அதே தேடல்.