செல்ல நாய்க்குட்டியுடன் காதலர் தினம் கொண்டாடிய அமலாபால் | கிசுகிசுக்களைப்பற்றி கவலைப்படாத டாப்சி | ரகுல் பிரீத்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி | ரஜினியின் 2.ஓ 2019-ல் ரிலீஸ்? | வெரைட்டியான காதல் கதைகள் தேடும் பிரபாஸ் | காது கேளாதவர் வேடத்தில் ராம்சரண் | சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் சீமராஜா | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் |
ஸ்பைடர் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தனது மார்க்கெட் உச்சம் தொடும் என்று எதிர்பார்த்திருந்தார் ரகுல் பிரீத் சிங். ஆனால் அந்த படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததால், அடுத்தபடியாக மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கயிருந்த விஜய் 62வது பட வாய்ப்பினை இழந்தார். அதோடு ஸ்பைடர் தோல்வியினால் தெலுங்கிலும் ரகுல் பிரீத் சிங்கின் மார்க்கெட் சரிந்தது. அதன்காரணமாக இந்தியில் அய்யாரி படத்தில் கமிட்டாகி நடித்த அவர், தற்போது அஜய்தேவ்கன் நடிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்தி, தமிழில் நடிக்கும் புதிய படங்களில் ரகுல் பிரீத் சிங் இரண்டாவது நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரகுல்பிரீத்சிங் உடனடியாக அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், தற்போது நான் நடித்து வரும் படங்களில் முதன்மை நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடித்தபோதும், அவர்களை காரணம் காட்டி எனது ரோலை டைரக்டர்கள் டம்மியாக்கவில்லை. அப்படி மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை இரண்டாவது நாயகியாக்கினால் அந்த படங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத்சிங்.