SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெ., கைரேகை பெற வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு கொடுக்கவில்லை : அரசு டாக்டர் திடீர் பல்டி

2018-02-16@ 00:50:51

சென்னை: ஜெயலலிதாவிடம் கைரேகை எடுப்பது குறித்து சுகாதார செயலாளர் என்னை தொலைபேசியில் அழைத்ததால்தான் கைரேகை எடுத்தேன் என கூறிய அரசு டாக்டர் பாலாஜி ஒரே இரவில், நான் அப்படி கூறவே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மூலம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களிடம் நீதிபதி தனி, தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். ஆனால், பெரும்பாலான டாக்டர்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.

கடந்த டிசம்பர் 7ம் தேதி ஆஜரான அரசு டாக்டர் பாலாஜி மட்டும் ஜெயலலிதாவை பார்த்ததாக விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். மேலும், அவர் நான்தான் அவருக்கு டாக்டர்களை அறிமுகம் செய்து வைத்ததாகவும், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைதேர்தல் தொடர்பான வேட்பாளர்கள் படிவத்தில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றபோது நான் உடன் இருந்தேன் என்றும் டாக்டர் பாலாஜி தெரிவித்தார். அப்போது, அவரது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த ஜனவரி 25ம் தேதி மீண்டும் ஆஜரான அரசு டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாகவும், வேட்பாளர்கள் விண்ணப்பத்தில் கைரேகை பெற்றது தொடர்பாகவும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார்.இந்த நிலையில், மூன்றாவது முறையாக அரசு டாக்டர் பாலாஜி ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. அதன்பேரில், அரசு டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் நேற்றுமுன்தினம் காலை 10.15 மணியளவில் மீண்டும் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதால் அவரிடம் கைரேகை பெற்றதாக வாக்குமூலமாக அளித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதனிடையே, நேற்று காலை 10 மணியளவில் அரசு டாக்டர் பாலாஜி திடீரென விசாரணை ஆணையத்திற்கு வந்தார். அப்போது, அவர், விசாரணை ஆணையத்தில்  மனு ஒன்றை அளித்தார். இதில், ஜெயலலிதா கைரேகை பெற்றது தொடர்பாக அந்த மனுவில் சில விளக்கங்கள் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நான் அரசு டாக்டர் என்ற அடிப்படையில் என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டே ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றேன். இதற்காக, சுகாதாரத்துறை செயலாளரிடம் இருந்து எந்த வித உத்தரவும் வரவில்லை. அரசு மருத்துவர் என்ற அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த மனுவில் சான்றொப்பம் அளித்தேன். இது தொடர்பாக ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளேன்’ என்றார். அரசு டாக்டர் பாலாஜி நேற்றுமுன்தினம் விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவின் கைரேகை பெற்றது தொடர்பாக கேள்வி கேட்கவில்லை என்று கூறினார். ஆனால், திடீரென ஜெயலலிதா கைரேகை பெற்ற குறித்து ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது என்று கூறியிருப்பதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடயவியல் சோதனையில் ஜெ. கைரேகை:

அதிமுக வேட்பாளர்களிடன் தேர்தல் படிவத்தில் ஜெயலலிதாவிடம் பெறப்பட்ட கைரேகை உண்மைதன்மை அறிய தடயவில் சோதனைக்கு விசாரணை ஆணையம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு சம்மன்:

முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆனூர் ஜெகதீசனுக்கு வரும் 22ம் தேதியில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்