SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த 3 லட்சம் சிகரெட் பறிமுதல்

2018-02-16@ 01:26:25

பாரிமுனை: வெளிநாடுகளில் இருந்து சிகரெட் பாக்கெட்கள் கடத்தி வந்து சென்னை பாரிமுனை, பர்மாபஜார், கொத்தவால்சாவடி, சவுகார்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக, வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பர்மா பஜாரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வியாசர்பாடியை சேர்ந்த மாதவன் (26) என்பவருக்கு சொந்தமான கடையில் 30 பண்டல் வெளிநாட்டு சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 3 லட்சம் என கூறப்படுகிறது. அந்த சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்த போலீசார், மாதவனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • Glassbridgechina

    6,500 அடி உயரத்தில் கண்ணாடி தொங்கு பாலம்: சொந்த சாதனையை முறியடித்த சீனா

  • ThiruvallikinaiParthasarathy

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தெப்ப திருவிழா

  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்