காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால் | விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் | இத்தாலி மொழியில் சிவகுமாரின் மகாபாரத புத்தகம் | எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் | ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ | சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் | விடுமுறை ராஜாவாக சீமராஜா | புது கன்னிராசியிலும் பாண்டியராஜன் | ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா' | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2' |
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் பிரபுதேவா. இவர் தற்போது சார்லி சாப்ளின் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், பிரபுதேவா சமீபத்தில் அஜித்தை சந்தித்து, கதை ஒன்றையும் கூறியுள்ளார். இதனால், விஸ்வாசம் படத்தை அடுத்து, அஜித், பிரபுதேவா இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல், விஸ்வாசம் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்திருப்பதும் ஒரு ‛கமிட்மென்ட்'டை வைத்தே என்கின்றனர். அதாவது, நயன்தாரா தயாரிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அஜித் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதே அது. இவற்றில் எது நடக்கும் என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும்.