SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணத்தை பெற்று கொண்டு காசோலை கொடுத்து நூதன மோசடி : தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் 27.76 லட்சம் சுருட்டிய ஊழியர் கைது

2018-02-16@ 01:33:34

சென்னை: பணத்தை பெற்று கொண்டு காசோலைகள் கொடுத்து மருந்து விற்பனை நிறுவனத்தில் 27.76 லட்சம் கையாடல் செய்த ஊழியர் மற்றும் மருந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் அசோக் எண்டர்பிரைசஸ்  என்ற மருந்து மொத்த விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மோலாளர் சதீஷ் (32), இரண்டு நாட்களுக்கு முன் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக ரங்கநாதன் வேலை செய்து வருகிறார். இவர் மருந்து விற்பனை செய்யப்பட்ட வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யும் பணத்தில் சிறுக சிறுக கடந்த மூன்று ஆண்டுகளில் 27.76 லட்சம் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின்பேரில் எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் தேவராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது கே.கே.நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (48), விற்பனை செய்யப்படும் மருந்துக்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்று கொண்டு, குன்றத்தூர் சந்தோஷ் அவென்யூ பகுதியில் மருந்துக்கடை நடத்தி வரும் சிவசங்கரன் (25) உதவியுடன் மருந்து கடைக்காரர்கள் பணத்திற்கு பதில் காசோலை கொடுத்தாக மருந்து நிறுவனத்தில் ரங்கநாதன் கொடுத்து வந்துள்ளார். நிறுவனம் சார்பில் வங்கியில் காசோலை செலுத்திய போது பணம் இல்லாமல் காசோலைகள் திரும்ப வந்துள்ளது. முதலில் இதை மருந்து நிறுவனம் சரியாக கவனிக்கவில்லை. இதை ரங்கநாதன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். மருந்து விற்பனைக்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்று கொண்டு அதிகளவில் காசோலைகள் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொடுத்த காசோலைகள் அனைத்தும் ஒரே வங்கி கணக்கின் காசோலையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரங்கநாதன் தனது நண்பர் சிவசங்கரன் உதவியுடன் 27.76 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மருந்து நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி ரங்கநாதன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மருந்து கடை உரிமையாளர் சிவசங்கரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்