SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக மாஜி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மனைவிகளுக்கு ஓராண்டு சிறை உறுதி : மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

2018-02-16@ 01:21:10

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் இரு மனைவிகளுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் வி.பன்னீர்செல்வம். இவர், வருமானத்திற்கு அதிகமாக ரூ.21 லட்சத்து 36 ஆயிரம்  அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பன்னீர்செல்வத்தின் இரண்டு மனைவிகளான ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பன்னீர்செல்வத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.  அவரது இரு மனைவிகள் ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோருக்கு தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து 2007ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மூவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், 2012ல் பன்னீர்செல்வம் மரணமடைந்தார். மேல் முறையீடு வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. அவரது இரு மனைவிகளான மனுதாரர்கள் தங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கியதற்கான வருமான ஆதாரங்களைக் காட்டவில்லை என்றும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே, உரிய சாட்சிகளின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. தண்டனை அனுபவித்தலை பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்பட்ட கடுங்காவல் தண்டனை, சாதாரண தண்டனையாக மாற்றி உத்தரவிடப்படுகிறது. இவர்கள் இரண்டு வாரத்திற்குள் சரணடைய வேண்டும். தவறினால் அவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • Glassbridgechina

    6,500 அடி உயரத்தில் கண்ணாடி தொங்கு பாலம்: சொந்த சாதனையை முறியடித்த சீனா

  • ThiruvallikinaiParthasarathy

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தெப்ப திருவிழா

  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்