51 நாள் ஐபிஎல் சீசன்-11 திருவிழா : போட்டி அட்டவணை வெளியீடு

2018-02-16@ 01:21:52

புதுடெல்லி: ஐபிஎல் சீசன்-11 டி20 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 9 இடங்களில் 51 நாட்களுக்கு 60 போட்டிகள் நடக்க உள்ளன. மும்பை வாங்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ம் தேதி, முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் சீசன்-11 டி20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
ஏப்ரல் 7ம் தேதி, மும்பை வாங்கடே மைதானத்தில் துவக்க விழாவுடன், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 2 ஆண்டு தடை முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் மகேந்திர சிங் டோனி தலைமையில் களமிறங்குவதால் இத்தொடர் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடக்க உள்ளன.
56 லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிபயர்-1 சுற்றிலும், அடுத்த 2 அணிகள் எலிமினேட்டர் சுற்றிலும் மோதும். குவாலிபயர்-1 சுற்றில் வென்ற அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடைந்த அணி, எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியுடன் குவாலிபயர்-2 சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். குவாலிபயர்-2, எலிமினேட்டர் சுற்றுக்கான போட்டி இடம் இன்னும் முடிவாகவில்லை. மே 27ம் தேதி இறுதிப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கிறது.
முழு அட்டவணை
தேதி போட்டி இடம் நேரம்
ஏப்.7 சிஎஸ்கே-மும்பை மும்பை இரவு 8.00
ஏப்.8 டெல்லி-பஞ்சாப் டெல்லி மாலை 4.00
ஏப்.8 கொல்கத்தா-பெங்களூர் கொல்கத்தா இரவு 8.00
ஏப்.9 சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ஐதராபாத் இரவு 8.00
ஏப்.10 சிஎஸ்கே - கொல்கத்தா சென்னை இரவு 8.00
ஏப்.11 ராஜஸ்தான் - டெல்லி ஜெய்ப்பூர் இரவு 8.00
ஏப்.12 சன்ரைசர்ஸ் - மும்பை ஐதராபாத் இரவு 8.00
ஏப்.13 பெங்களூர் - பஞ்சாப் பெங்களூரு இரவு 8.00
ஏப்.14 மும்பை - டெல்லி மும்பை மாலை 4.00
ஏப்.14 கொல்கத்தா - சன்ரைசர்ஸ் கொல்கத்தா இரவு 8.00
ஏப்.15 பெங்களூர் - ராஜஸ்தான் பெங்களூரூ மாலை 4.00
ஏப்.15 பஞ்சாப் - சிஎஸ்கே இந்தூர் இரவு 8.00
ஏப்.16 கொல்கத்தா - டெல்லி கொல்கத்தா இரவு 8.00
ஏப்.17 மும்பை - பெங்களூர் மும்பை இரவு 8.00
ஏப்.18 ராஜஸ்தான் - கொல்கத்தா ஜெய்ப்பூர் இரவு 8.00
ஏப்.19 பஞ்சாப் - சன்ரைசர்ஸ் இந்தூர் இரவு 8.00
ஏப்.20 சிஎஸ்கே - ராஜஸ்தான் சென்னை இரவு 8.00
ஏப்.21 கொல்கத்தா - பஞ்சாப் கொல்கத்தா மாலை 4.00
ஏப்.21 டெல்லி - பெங்களூர் டெல்லி இரவு 8.00
ஏப்.22 சன்ரைசர்ஸ் - சிஎஸ்கே ஐதராபாத் மாலை 4.00
ஏப்.22 ராஜஸ்தான் - மும்பை ஜெய்ப்பூர் இரவு 8.00
ஏப்.23 பஞ்சாப் - டெல்லி இந்தூர் இரவு 8.00
ஏப்.24 மும்பை - சன்ரைசர்ஸ் மும்பை இரவு 8.00
ஏப்.25 பெங்களூர் - சிஎஸ்கே பெங்களூரு இரவு 8.00
ஏப்.26 சன்ரைசர்ஸ் - பஞ்சாப் ஐதராபாத் இரவு 8.00
ஏப்.27 டெல்லி - கொல்கத்தா டெல்லி இரவு 8.00
ஏப்.28 சிஎஸ்கே - மும்பை சென்னை இரவு 8.00
ஏப்.29 ராஜஸ்தான் - சன்ரைசர்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4.00
ஏப்.29 பெங்களூர் - கொல்கத்தா பெங்களூரு இரவு 8.00
ஏப்.30 சிஎஸ்கே - டெல்லி சென்னை இரவு 8.00
மே 1 பெங்களூர் - மும்பை பெங்களூரு இரவு 8.00
மே 2 டெல்லி - ராஜஸ்தான் டெல்லி இரவு 8.00
மே 3 கொல்கத்தா - சிஎஸ்கே கொல்கத்தா இரவு 8.00
மே 4 பஞ்சாப் - மும்பை மொகாலி இரவு 8.00
மே 5 சிஎஸ்கே - பெங்களூர் சென்னை மாலை 4.00
மே 5 சன்ரைசர்ஸ் - டெல்லி ஐதராபாத் இரவு 8.00
மே 6 மும்பை - கொல்கத்தா மும்பை மாலை 4.00
மே 6 பஞ்சாப் - ராஜஸ்தான் மொகாலி இரவு 8.00
மே 7 சன்ரைசர்ஸ் - பெங்களூர் ஐதராபாத் இரவு 8.00
மே 8 ராஜஸ்தான் - பஞ்சாப் ஜெய்ப்பூர் இரவு 8.00
மே 9 கொல்கத்தா - மும்பை கொல்கத்தா இரவு 8.00
மே 10 டெல்லி - சன்ரைசர்ஸ் டெல்லி இரவு 8.00
மே 11 ராஜஸ்தான் - சிஎஸ்கே ஜெய்ப்பூர் இரவு 8.00
மே 12 பஞ்சாப் - கொல்கத்தா மொகாலி மாலை 4.00
மே 12 பெங்களூர் - டெல்லி பெங்களூரு இரவு 8.00
மே 13 சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் சென்னை மாலை 4.00
மே 13 மும்பை - ராஜஸ்தான் மும்பை இரவு 8.00
மே 14 பஞ்சாப் - பெங்களூர் மொகாலி இரவு 8.00
மே 15 கொல்கத்தா - ராஜஸ்தான் கொல்கத்தா இரவு 8.00
மே 16 மும்பை - பஞ்சாப் மும்பை இரவு 8.00
மே 17 பெங்களூர் - சன்ரைசர்ஸ் பெங்களூரு இரவு 8.00
மே 18 டெல்லி - சிஎஸ்கே டெல்லி இரவு 8.00
மே 19 ராஜஸ்தான் - பெங்களூர் ஜெய்ப்பூர் மாலை 4.00
மே 19 சன்ரைசர்ஸ் - கொல்கத்தா ஐதராபாத் இரவு 8.00
மே 20 டெல்லி - மும்பை டெல்லி மாலை 4.00
மே 20 சிஎஸ்கே - பஞ்சாப் சென்னை இரவு 8.00
மே 22 குவாலிபயர் -1 மும்பை இரவு 8.00
மே 23 எலிமினேட்டர் இரவு 8.00
மே 25 குவாலிபயர் -2 இரவு 8.00
மே 27 இறுதிப்போட்டி மும்பை இரவு 8.00
மேலும் செய்திகள்
ரியல் மாட்ரிட் அணிக்காக 100வது கோல் அடித்து சாதித்தார் ரொனால்டோ
தேசிய கால்பந்தில் சாம்பியன் : வரலாறு படைத்தது தமிழக மகளிர் அணி
உலக கோப்பை கிரிக்கெட் : தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது நேபாளம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இன்று கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற இந்தியா முனைப்பு
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை இந்தியா நம்பர் 1
வரலாற்று சாதனை படைத்ததில் மகிழ்ச்சி...
16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
LatestNews
ரூ.4 கோடி செம்மரக்கட்டை பொம்மைகள் பறிமுதல்
01:56
உபி.யில் சட்ட விரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலை அழிப்பு
01:55
10-ம் வகுப்புக்கு 20-ம் தேதி முதல் செய்முறை தேர்வு
00:03
இலங்கை சிறையில் இருந்து 109 தமிழக மீனவர்கள் விடுதலை
20:53
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
20:40
நிதியமைச்சர் அருண் ஜெட்லி- தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு
19:49