காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால் | விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் | இத்தாலி மொழியில் சிவகுமாரின் மகாபாரத புத்தகம் | எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் | ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ | சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் | விடுமுறை ராஜாவாக சீமராஜா | புது கன்னிராசியிலும் பாண்டியராஜன் | ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா' | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2' |
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைகழத்தில் ஜல்லிக்கட்டு என்ற தமிழ் சினிமாவின் பாடல்கள் வெளியிடப்பட்டது.
அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், ஜெயபால் நடேசன், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் இணை தயாரிப்பில், சந்தோஷ் கோபாலின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், தமிழ் கலாச்சாரத்தில் ஒன்றான ஜல்லிகட்டையும், அதை மீட்டெடுக்க நடந்த போராட்டத்தையும் மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
இதன் பாடல் வெளியீட்டு விழா ஹார்வர்டு பல்லைகழகத்தில் நடந்தது. தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டை கைவிடக் கூடாது என, அதை தக்கவைக்க தொடர்ந்து முயற்சி செய்து வரும் காங்கேயம் காளை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேயன் சிவசேனாபதி வெளியிட்டார்.
இந்திய தலைநகர் டில்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் சபையாச்சி முகர்ஜியுடன், இணை தயாரிப்பாளரான குரு சரவணன் ஆகியோரும் சேர்ந்து பெற்றுக் கொண்டனர்.