காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால் | விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் | இத்தாலி மொழியில் சிவகுமாரின் மகாபாரத புத்தகம் | எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் | ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ | சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் | விடுமுறை ராஜாவாக சீமராஜா | புது கன்னிராசியிலும் பாண்டியராஜன் | ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா' | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2' |
மேக்ஸிம் புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு ரகுல் பிரீத் சிங் போஸ் கொடுத்தது தென்னிந்திய சினிமாவின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ஐதராபாத் வந்த ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டியில், மேக்ஸிம் புத்தகத்திற்கு போஸ் கொடுக்கும் வாய்ப்பு யாருக்கும் சுலபத்தில் கிடைத்து விடாது. நான் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தபோது கிடைக்காத அந்த வாய்ப்பு ஹிந்தியில் அய்யாரி படத்தில் நடித்தபோது தான் கிடைத்தது.
ஹிந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகைகளும் மேக்ஸிம் அட்டைப் படத்திற்கு போட்டோ சூட் செய்துள்ளனர். நடிகைகள் தங்களது உடல்கட்டை பிட்டாக வைத்திருப்பதை வெளிப்படுத்த இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகிறது.
தென்னிந்தியாவில் தான் மேக்ஸிம் அட்டைப்படத்திற்கு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்திருப்பதை பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஹிந்தி சினிமாவைப் பொறுத்தவரை இது பெரிய விசயமே இல்லை. பட வாய்ப்புக்காக இப்படி போஸ் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.